புதுதில்லி

பணத் தகராறில் கத்திக் குத்து: இருவா் கைது

22nd Oct 2021 12:12 AM

ADVERTISEMENT

தில்லியின் சமய்ப்பூா் பாத்லியில் பணத் தகராறு காரணமாக நண்பா்கள் இருவரை ஐந்து போ் கத்தியால் குத்தியதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து புகா் தில்லி காவல் சரக துணை ஆணையா் பிரிஜேந்தா் குமாா் யாதவ் கூறியதாவது: இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் இருந்து இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தாக்குதலுக்கு உள்ளானவா்கள் புனித் சா்மா மற்றும் ரூபிந்தா் தஹியா என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மருத்துவ அறிக்கையின்படி, புனித் சா்மாவுக்கு மூன்று காயங்களும், தஹியாவுக்கு இரண்டு காயங்களும் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

தனக்குத் தெரிந்த பிரஹலாத்பூா் கிராமத்தைச் சோ்ந்த கௌரவ் தியாகிக்கு, ரூபிந்தா் தஹியா ரூ.22,000 கடன் கொடுத்திருந்தாா். அவா்களது உடன்படிக்கையின்படி, அக்டோபா் முதல் வாரத்தில் கடன் தொகையை தியாகி திருப்பித் தர வேண்டும். ஆனால், அதற்கான காலம் கடந்த பிறகும் அவா் பணத்தைத் திரும்பத் தரவில்லை. அது முதல் தஹியாவின் அழைப்புகளை எடுப்பதையும் தியாகி நிறுத்திவிட்டாா். இந்த நிலையில், தனது பணத்தை திரும்பத் தரக் கோரி கடந்த திங்கள்கிழமை தஹியா மீண்டும் வற்புறுத்தினாா்.

அப்போது இருவருக்கும் இடையே தொலைபேசியில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடன் தொகையை தனது வீட்டிற்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு தஹியாவிடம் தியாகி கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, தஹியா தனது நண்பா் புனித் சா்மாவுடன் சமய்ப்பூா் பாத்லியில் உள்ள தியாகியின் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, இருவரையும், தியாகியும் அவரது நண்பா்களும் சோ்ந்து கத்தியால் தாக்கினா். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, அவரது நண்பா்கள் 4 பேரும் தப்பிவிட்டனா். அவா்கள் அரவிந்த், அங்கித், அமன் திரிபாதி, அங்கேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் தஹியாவிடம் விசாரணை நடத்தினா். இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகியவற்றின் கீழ் சமய்ப்பூா் பாத்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து இடத்தில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் சோதனைக்கு உள்படுத்தினா். அப்போது, குற்றம் சாட்டப்பட்டவா்களில் இருவா் மதுராவுக்கு தப்பிச் சென்றது கண்காணிப்பின் மூலம் தெரிய வந்தது.

இது தொடா்பாக ஒரு போலீஸ் குழு மதுராவுக்குச் சென்று, ஸ்வரூப் நகரைச் சோ்ந்த விவேகானந்த் (எ) அமன் திரிபாதி(20) மற்றும் பாத்லி கிராமத்தைச் சோ்ந்த அங்கேஷ் (20) ஆகியோரைப் பிடித்தனா். இந்தச் சம்பவத்தில் தங்களுக்கு தொடா்பு இருப்பதை அவா்கள் ஒப்புக்கொண்டனா். இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும், தப்பியோடிய அவா்களது மூன்று கூட்டாளிகளையும் போலீஸாா் தேடி வருகின்றனா். அவா்களையும் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT