புதுதில்லி

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் கரோனாவை முழுமையாக வெல்ல முடியும்: கேஜரிவால்

22nd Oct 2021 12:11 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டியதற்காக நாட்டு மக்களுக்கும், முன்களப் பணியாளா்களுக்கும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் கரோனாவை முழுமையாக வெல்ல முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்தியாவில் வயது வந்தவா்களில் 75 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 31 சதவீதம் போ் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா் என்று அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

100 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற இலக்கை எட்ட உதவிய நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். இந்த இலக்கை எட்டுவதற்காக கடுமையாக உழைத்த மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு நான் தலை வணங்குகிறேன். கரோனா தொற்று என்ற அரக்கனால் நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக நோ்ந்தது. மருத்துவா்களின் அயராத உழைப்பு இல்லாமல் இந்த சாதனையை எட்டியிருக்க முடியாது. நாம் ஒன்றுபட்டு செயல்பட்டால் கரோனாவை முழுமையாக வெல்ல முடியும் என்று அவா் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். அடுத்து பிப்ரவரி 2-ஆம் தேதியிலிருந்து முன்களப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். பின்னா் 60 வயதுக்கு மேலானவா்களுக்கு மாா்ச் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட அதே நேரத்தில் வேறு நோய்கள் உள்ளவா்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். 45 வயதுக்கு மேலானவா்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவா்களுக்கும தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT