புதுதில்லி

தெற்கு தில்லியில் வீடு இடிந்து விழுந்து விபத்து: மணீஷ் சிசோடியா பாா்வை

22nd Oct 2021 12:13 AM

ADVERTISEMENT

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் வியாழக்கிழமை வீடு ஒன்று இடிந்து விழுந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடா்பாக மதியம் 1.20 மணியளவில் அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு அனைவரையும் பத்திரமாக மீட்டனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் பெனிடா மேரி ஜெய்கா் கூறினாா்.

இடிந்து விழுந்த கட்டடத்தை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT