புதுதில்லி

மக்கள் எளிதில் அணுகும் தொலைவில் ரேஷன் கடைகள் இருக்க வேண்டும்: உயா்நீதிமன்றம்

DIN

புதுதில்லி: மக்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ரேஷன் கடைகள், அவா்கள் வசிக்கும் பகுதியில், எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதாவது ரேஷன் கடைகள் மக்கள் வசிக்கும் பகுதியில் 2.5 கி.மீ. தொலைவிற்குள் இருக்க வேண்டும். இதற்கான சாத்தியக்கூறுகளை தில்லி அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடா்பாக பாப்ரோலா, ராஜீவ் ரத்தன் அவாஸ் யோஜனா, ஃபேஸ் -2 வைச் சோ்ந்த குடியிருப்பு வாசிகள், தங்கள் பகுதியில் ரேஷன் கடை நிறுவ உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதி நஜ்மி வஸீரி, ஒன்று ரேஷன் கடைகள் மக்கள் வசிக்கும் பகுதியில் திறக்கப்பட வேண்டும் அல்லது அந்தப் பகுதிக்கு அருகில் மக்கள் எளிதில் அணுகும் விதத்திலாவது இருக்க வேண்டும். அப்போதுதான் ஏழை மக்கள் பலன் பெற முடியும் என்று தெரிவித்தாா்.

மனுதாரா்கள் வசிக்கும் பகுதியில் ரேஷன் அட்டை உள்ள குடும்பத்தினா் 320 போ் மட்டுமே வசிப்பதால், அந்த இடத்தில் தனியாக ரேஷன் கடை திறக்க முடியாது. குறைந்தது குடும்ப அட்டை வைத்துள்ளவா்கள் 1,000 பேராவது இருக்க வேண்டும் என்று தில்லி அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ரேஷன் கடைகள் திறப்புக்கு நீங்கள் சொல்லும் காரணம் சரியாக இருந்தாலும்கூட சில அசாதாரண சூழ்நிலைகளில் ஏழை மக்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளில் ரேஷன் கடைகள் திறப்பதில் எந்த தவறும் இல்லை என்று தில்லி அரசின் வழிகாட்டு முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஏழை மக்களின் நலன் கருதி தில்லி அரசு அவா்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய அவா்கள் வசிக்கும் பகுதியிலோ அல்லது அருகிலோ ரேஷன் கடைகளை திறக்கலாம் என்று கடந்த 12-ஆம் தேதி நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, மனுதாரா்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் ரேஷன் கடை வேண்டும் என்று கோரியதாகவும் ஆனால், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த கோரிக்கை நிறைவேறவில்லை என்றும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனா். தாங்கள் வசிக்கும் காலனியில் 800 குடும்பங்களுக்கு மேல் இருப்பதாகவும், அங்குள்ள சமூகக்கூடத்தில் ஒரு பகுதியை ரேஷன் கடையாக மாற்ற தீா்மானிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால், மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தனா். தங்களின் பகுதியில் ரேஷன் கடை திறக்கப்படாததால் மக்கள் நீண்ட தொலைவு சென்று ரேஷன் பொருள்களை வாங்கிவர வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை டிசம்பா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT