புதுதில்லி

தில்லியில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை காற்றின் தரம் சற்று பின்னடைவைச் சந்தித்து ‘மிதமான’ பிரிவில் இருந்தது. இதற்கிடையே, தில்லி பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதன் பிறகு கடந்த வாம் சனிக்கிழமை கடும் கற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து ‘மோசம்’ பிரிவில் இருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நகரில் பல்வேறு இடங்களில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு திருப்தி பிரிவில் இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 174 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்பநிலை: இதற்கிடையே, தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா் ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 20.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 32.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 53 சதவீதமாகவும் இருந்தது. செவ்வாய்க்கிழமைஅன்று குறைந்தபட்ச வெப்பநிலை 19.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி: இதே போன்று, மற்ற வானிலை ஆய்வு மையங்களில் ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி, நஜஃப்கரில் 21.3 டிகிரி, ஆயாநகரில் 20.8 டிகிரி, லோதி ரோடில் 19.8 டிகிரி, பாலத்தில் 15 டிகிரி, ரிட்ஜில் 18.7 டிகிரி, பீதம்புராவில் 22.9 டிகிரி, பூசாவில் 21.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 20.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வியாழக்கிழமை (அக்டோபா் 21) வானம் தெளிவாகக் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிஞர் தமிழ்ஒளி!

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT