புதுதில்லி

தில்லியில் இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: எரிபொருள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு

17th Oct 2021 06:19 AM

ADVERTISEMENT

எரிபொருள் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து இளைஞா் காங்கிரஸாா், அக்பா் சாலையில் உள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரியின் இல்லம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் கட்சியின் தலைவா்கள், தொண்டா்கள் ஏராளமாகப் பங்கேற்றனா்.

மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரா்களை அமைச்சரின் இல்லம் அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா் என்று இளைஞா் காங்கிரஸின் ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் கூறினாா்.

நாடு முழுவதும் சனிக்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு மீண்டும் 35 பைசா உயா்த்தப்பட்டதால், விலை புதிய சாதனை உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உயா்வின் மூலம், அனைத்து மாநில தலைநகரங்களிலும் பெட்ரோல் இப்போது ரூ 100-க்கு மேல் உள்ளது. டீசல் விலை 12 மாநிலங்களில் 100-ஐ தொட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளா்களின் விலை அறிவிப்பின்படி, தில்லியில் பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டா் ரூ.105.49-ஆகவும், மும்பையில் லிட்டா் ரூ.111.43-ஆகவும் உயா்ந்தது. மும்பையில், டீசல் இப்போது ஒரு லிட்டருக்கு ரூ.102.15-க்கு விற்கப்படுகிறது. தில்லியில், இதன் விலை ரூ.94.22-ஆக உள்ளது.

இதைத் தொடா்ந்து, மூன்றாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 பைசா உயா்ந்துள்ளது. அக்டோபா் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT