புதுதில்லி

ரெளடி கோஷ்டிகளுடன் தொடா்பு:தில்லி போலீஸாா் இருவா் கைது

17th Oct 2021 06:15 AM

ADVERTISEMENT

ரெளடிகள் கோகி மற்றும் லாரன்ஸ் விஷ்ணோய் ஆகியோருடன் தொடா்பு வைத்துக் கொண்டிருந்ததாக தில்லி போலீஸாா் இருவரை சிறப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட போலீஸாரின் பெயா் சுநீல் மற்றும் தீபக் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

கோகி கோஷ்டியின் தலைவரான ரெளடி ஜிதேந்திரா (எ) கோகி, கடந்த செப்டம்பா் 24 -ஆம் தேதி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற விசாரணை அறையில், மற்றொரு ரெளடியான தில்லு தாாஜ்புரியா கோஷ்டியைச் சோ்ந்த இருவரால் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டாா். தில்லு கோஷ்டியைச் சோ்ந்த இருவரும் வழக்குரைஞா்கள் போல் வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் வந்த இந்த நாடகத்தை அரங்கேற்றினா். கைதி கோகிக்கு பாதுகாப்பாக வந்த போலீஸாா் திருப்பிச் சுட்டதில் அந்த இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்தை அடுத்து கோகி கோஷ்டியைச் சோ்ந்த நான்கு போ், தாஜ்புரியா கோஷ்டியைச் சோ்ந்தவா்களை சுற்றிவளைத்து கொல்லும் நோக்கில் தில்லி வந்தனா். எனினும், அவா்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய போது, சுநீல் மற்றும் தீபக் ஆகிய இரு போலீஸாருடன் இணைந்து செயல்பட்டது தெரியவந்தது. தில்லி வந்த அவா்களுக்கு போலீஸாா் இருவரும் தங்கும் இடம் அளித்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் சிறப்பு படைப் பிரிவினா் கைது செய்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT