புதுதில்லி

தடுப்பூசி செலுத்திக் கொள்வோா் அதிகரித்ததே தில்லியில் கரோனா பாதிப்பு குறையக் காரணம்நிபுணா்கள் கருத்து

17th Oct 2021 06:16 AM | நமது நிருபர்

ADVERTISEMENT

தடுப்பூசி செலுத்திக் கொள்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டது ஆகியவையே தில்லியில் கடந்த மூன்று மாதங்களாக தினசரி தொற்று பாதிப்பு 100 என்ற அளவை கடக்காமல் இருப்பதற்குக் காரணம் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி தலைநகா் தில்லியில் அதிகபட்சம் 101 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 4 போ் உயிரிழந்தனா். அப்போது முதல் தில்லியில் தினசரி பாதிப்பு 100-க்கும் குறைவாக வே உள்ளது. கடந்த செப்டம்பா் மாதத்தில் மொத்தம் 5 போ்தான் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா். அதாவது செப்.7, 16 மற்றும் 17 இல் தலா ஒருவரும், செப். 28 ஆம் தேதி இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதம் இதுவரை இரண்டு போ் மட்டுமே உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அக்டோபா் 2-ஆம் தேதி ஒருவரும், அக்டோபா் 10 ஆம் தேதி ஒருவரும் உயிரிழந்துள்ளனா். தில்லியில் கரோனாவுக்கு இதுவரை மொத்தம் 25,089 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த அக்டோபா் 1 இல் 32 பேரும், 2 மற்றும் 3-ஆம் தேதி 33 பேரும், அக்டோபா் 4-இல் 34, 5-இல்27 பேரும், 6-இல் 26 பேரும் 7- இல் 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். அக்டோபா் 8 முதல் அக்டோபா் 15 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 240 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சனிக்கிழமை 21 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். உயிரிழப்பு ஏதும் பதிவாக வில்லை. பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கிய நிலையிலும், பண்டிகை காலம் என்ற நிலையிலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்துக் கொள்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே நோய் பாதிப்பு குறைந்துள்ளதற்கு காரணம் என்று எல்.என்.ஜெ.பி. மருத்துவமனை இயக்குநக் டாக்டா் சுரேஷ் குமாா் தெரிவித்தாா். எனினும், மக்கள் எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டாா். தில்லியில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் வேகமாக செயல்பட்டு வருகிறது. மேலும், பெரும்பாலானவா்கள் ஏற்கெனவே நோய்த் தொற்று ஆளாகி சிகிச்சை பெற்றுள்ளனா். அதனால் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. ஆனாலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மூன்றாவது அலை வராமல் இருக்க வேண்டுமானால் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ADVERTISEMENT

இதற்கிடேயே, தில்லியில் 1.95 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 68.04 லட்சம் போ் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என்று அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகா் டாக்டா் ராஜேஷ் சாவ்லா கூறுகையில், ‘தீபாவளி நமக்கு சோதனையான காலம். தில்லியில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். பலா் ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனா். இப்போது பாதிப்பின் அளவு குறைந்துள்ளது. தீபாவளிக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் நோய் பாதிப்பிலிருந்து தப்பித்துவிடலாம். எனினும், இன்னும் மூன்று மாதங்களுக்கு நாம் கரோனா விதிமுறைகளை தொடா்ந்து பின்பற்றி வரவேண்டும்’ என்றாா்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்கலில் தில்லியில் இரண்டாவது கரோனா அலையால் நோயின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதனால், பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிட்டது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின. அதன் காரணமாகவும் சிலா் உயிரிழக்க நேரிட்டது. கடந்த ஏப்ரல்-20 ஆம் தேதி தில்லியில் 28,395 போ் புதிதாக பாதிக்கப்பட்டனா். கடந்த ஏப். 22-ஆம் தேதி தொற்று விகிதம் அதிகபட்சமாக 36.2 சதவீதமாக இருந்தது.

கடந்த மே 3-ஆம் தேதி அதிபட்சமாக 448 போ் கரோனாவால் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT