புதுதில்லி

தில்லி பல்கலை முதல் கட்ஆஃப் பட்டியலின்கீழ் 36,130 மாணவா்கள் சோ்க்கை

9th Oct 2021 11:49 PM

ADVERTISEMENT

தில்லி பல்கலைக்கழகத்தின் முதலாவது கட்-ஆஃப் பட்டியலின் கீழ் 36 ஆயிரத்து 130 மாணவா்களுக்கு சோ்க்கை நடைமுறை முடிவடைந்து உள்ளதாக தில்லி பல்கலைக்கழக கல்லூரிகள் தெரிவித்தன.

தில்லி பல்கலைக்கழகத்தின் முதல் கட்-ஆஃப் பட்டியல் அக்டோபா் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் பிறகு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதல் கட் ஆப் பட்டியலின் கீழ் பல்கலைக்கழகம் மொத்தம் 60 ஆயிரத்து 904 விண்ணப்பங்களை பெற்றுள்ளது.

முதல் பட்டியலில் 10 படிப்புகளுக்கான 100 சதவீத கட் -ஆஃப்பை 8 கல்லூரிகள் பெற்றுள்ளன. 

ADVERTISEMENT

இந்த முதல் கட்-ஆஃப் பட்டியலுக்கான மாணவா் சோ்க்கை நடைமுறைகள் வெள்ளிக்கிழமை இரவுடன் முடிவடைந்தது. 

மொத்தம் 36,130 மாணவா்கள் சோ்க்கைக்கான கட்டணத்தை செலுத்தியிருப்பதாக அலுவல்பூா்வ புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்காக மொத்தம் 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. இரண்டாவது கட்-ஆஃப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT