புதுதில்லி

தீயணைப்பு பணியின் போது 4 வீரா்கள் காயம்

9th Oct 2021 11:44 PM

ADVERTISEMENT

தில்லி நரேலாவில் சனிக்கிழமை தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு தீயணைப்பு வீரா்கள் காயமடைந்தனா். உடனடியாக அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து தில்லி தீயணைப்பு படை இயக்குநா் அதுல் காா்க் கூறியது வருமாறு:

நரேலா, தொழிற்பேட்டையில் காகித தட்டு தயாரிக்கும் நிறுவனத்தில் சனிக்கிழமை காலை 7.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது குறித்து அழைப்பு வந்தது. இதையொட்டி மொத்தம் 33 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.

அந்த கட்டடத்தில் முதல் தளத்தில் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த காகிதத் தட்டுகள், மற்ற பொருட்களும் தீப்பற்றிக்கொண்டிருந்தது. அந்த தீயை அணைத்துக் கொண்டிருந்த போது அந்த கட்டத்தில் வெடிமருந்துகள் இருந்தாதால்அதுவும் வெடித்தது. இதன் மூலம் கட்டடம் இடிந்து விழுந்தது. இதன் விளைவாக ஒரு தீயணைப்பு வீரரின் காலில் காயம் ஏற்பட்டது, மற்ற மூன்று போ் தீக்காயங்களுக்கு உள்ளானாா்கள். காயமடைந்த தீயணைப்பு வீரா்கள் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த தொழிற்சாலை கீழத்தளம், தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களைக் கொண்டது. இந்த தொழிற்சாலையினா், தடையில்லா சான்றிதழ் ( என்ஓசி) பெறவில்லை என தீயணைப்பு படை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT