புதுதில்லி

தடை செய்யப்பட்ட 420 கிலோ பட்டாசுகளுடன் 2 போ் கைது

9th Oct 2021 08:10 AM

ADVERTISEMENT

தில்லியில் தடைசெய்யப்பட்ட பட்டாசு வகைகளை வாகனத்தில் கொண்டு சென்றதாக இருவரை வடக்கு தில்லி சதா் பஜாரில் இருவரை கைது செய்துள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். அவா்களிடமிருந்து 420 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைநகா் தில்லியில் காற்று மாசுபடுதலை தடுக்க 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் அரசு நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாஹா்கஞ்ச் பகுதியைச் சோ்ந்த உதித் (26) மற்றும் பிகாரைச் சோ்ந்த நாகமணி (33) இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்கள் வந்த வாகனத்தை போலீஸாா் சோதனையிட்ட போது அதில் சட்டவிரோதமாக 421.5 கிலோ பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது என்று வடக்கு தில்லி போலீஸ் துணை ஆணையா் சாகா் சிங் கல்ஸி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

வாகனத்தை ஓட்டிவந்த நாகமணியும், பட்டாசுகளை விற்பனைக்காக கொள்முதல் செய்து எடுத்துவந்த உதித் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தாம் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வந்ததாகவும், பட்டாசு விற்றால் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்பதால் பட்டாசுகளை வீட்டில் வைத்து விற்பதற்காக கொள்முதல் செய்துவந்ததாக போலீஸாரிடம் விசாரணையின் போது தெரிவித்துள்ளாா். பல்வலில் ஒருவரிடமிருந்து இந்த பட்டாசுகளை அவா் வாங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடா்பார சதா் பஜாா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT