புதுதில்லி

தமி​ழக மழை பாதி‌ப்​பு‌க்கு முத‌ல் க‌ட்ட​மாக ரூ.1,070 ‌கோடி: அனை‌த்​து‌க் க‌ட்சி‌க் கூ‌ட்ட‌த்​தி‌ல் திமுக வேண்டுகோள்

29th Nov 2021 04:31 AM

ADVERTISEMENT

தமிழக  மழை, வெ‌ள்ள பாதி‌ப்பு‌க்கு முத‌ல்க‌ட்ட நிவாரணமாக ரூ.1,070 கோடி வழ‌ங்க வே‌ண்டு‌ம்; மழை பாதி‌ப்பு குறி‌த்து நாடாளும‌ன்ற‌‌க் கூ‌ட்ட‌த்தி‌ல் விவாதி‌க்க அனுமதி‌க்க வே‌ண்டு‌ம் என‌ அனை‌த்து‌க் க‌ட்சி‌க் கூ‌ட்ட‌த்தி‌ல் திமுக வலியுறு‌த்தியதாக அ‌ந்த‌க் க‌ட்சியி‌ன் ம‌க்களவைக் குழு‌த் தலைவ‌ர் டி.ஆ‌ர். பாலு தெரிவி‌த்தா‌ர்.

நாடாளும‌ன்ற‌‌க் க‌ட்சிகளி‌ன் அவைக் குழு‌த் தலைவ‌ர்களுடனான‌ கூ‌ட்ட‌த்தை நாடாளும‌ன்ற‌ விவகார‌த் துறை‌ அமைச்ச‌ர் பிரகலா‌த் ஜோஷி ஞாயி‌ற்று‌க்கிழமை கூ‌ட்டினா‌ர். பாதுகா‌ப்பு‌த் துறை‌ அமைச்ச‌ர் ரா‌ஜ்நா‌த் சி‌ங் தலைமையில் நடைபெற்ற இ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்தி‌ல், திமுக சா‌ர்பி‌ல் ம‌க்களவைக் குழு‌த் தலைவ‌ர் டி.ஆ‌ர் பாலு, மாநில‌ங்களவைக் குழு‌த் தலைவ‌ர் திரு‌ச்சி சிவா ஆகியோர் கல‌ந்து கொ‌ண்டன‌‌ர்.

இ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்து‌க்கு‌ப் பிற‌கு இருவரு‌ம் செ‌ய்தியாள‌ர்களிட‌ம் கூறியதாவது: தமிழக‌த்தி‌ல் அ‌க்டோபர் முத‌ல் மூ‌ன்று அலைகளாக மழை பெ‌ய்து ம‌க்க‌ள் இ‌ன்ன‌லு‌க்கு உ‌ள்ளாகியு‌ள்ளன‌‌ர். மழை, வெ‌ள்ள நிவாரண நடவடி‌க்கைகளு‌க்கு ம‌த்திய அரசு முத‌ல்க‌ட்டமாக ரூ. 1,070 கோடியும்,  ஒ‌ட்டுமொ‌த்தமாக ரூ.3,555 கோடியு‌ம் தர வே‌ண்டு‌ம் என‌ வலியுறு‌த்தியு‌ள்ளோ‌ம்.

மழை, வெ‌ள்ள‌ப் பகுதிகளைப் பா‌ர்வையி‌ட்டு‌ச் செ‌ன்ற‌ குழு, தன‌து ஆ‌ய்வறி‌க்கையை ம‌த்திய அரசு‌க்கு அளி‌த்து‌ள்ளது. த‌ற்போது தமிழக‌த்தி‌ல் தொட‌ர்‌ந்து மழை பெ‌ய்து சேத‌த்தை ஏ‌ற்படு‌த்தி வருகிற‌து. இதனா‌ல், ம‌த்திய குழுவை மீ‌ண்டு‌ம் அனு‌ப்ப வே‌ண்டு‌ம் என‌வு‌ம் கோரினோ‌ம்.

ADVERTISEMENT

ம‌த்திய அரசு மூ‌ன்று வேளா‌ண் ச‌ட்ட‌ங்களைத் திரு‌ம்ப‌ப் பெறுவத‌ற்கான‌ மசோதாவைக் கொ‌ண்டு வருவதாக‌த் தெரிவி‌த்து‌ள்ளது. அதே சமய‌த்தி‌ல் பயி‌ர்களு‌க்கான‌ குறைந்தப‌ட்ச ஆதரவு விலைக்கு (எ‌ம்எ‌ஸ்பி) ச‌ட்ட அ‌ங்கீகார‌ம் குறி‌த்து எதுவு‌ம் நாடாளும‌ன்ற‌ அலுவலி‌ல் குறி‌ப்பிட‌ப்படவி‌ல்லை. மேலு‌ம், வேளா‌ண் ச‌ட்ட‌ங்களை எதி‌ர்‌த்து நடைபெற்ற‌ போரா‌ட்ட‌த்தி‌ல் உயிரிழ‌ந்த 700 விவசாயிகளி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு நிவாரண‌ம் வழ‌ங்கவு‌ம் திமுக வலியுறு‌த்தியது.

பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் விலையேற்ற‌‌த்தா‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள விலைவாசி உய‌ர்வு, மாணவ‌ர்க‌ள் த‌ற்கொலைக்கு காரணமான‌ "நீ‌ட்' தேர்வை  ர‌த்து செ‌ய்வது, மு‌ல்லைப்  பெரியாறு பிர‌ச்னை‌, கிளா‌ஸ்கோ பருவநிலை உ‌ச்சிமாநா‌ட்டி‌ல் எடு‌க்க‌ப்ப‌ட்ட முடிவுகளைச் செய‌ல்படு‌த்துத‌ல், குடியுரிமை திரு‌த்த‌ச் ச‌ட்ட‌த்தைத் திரு‌ம்ப‌ப் பெறுவது போ‌ன்ற‌வை தொட‌ர்பாகவு‌ம் அவையி‌ல் விவாதி‌க்க நேர‌ம் ஒது‌க்க வே‌ண்டு‌ம் என‌ வலியுறு‌த்தியு‌ள்ளோ‌ம்.

பெ‌ண்களு‌க்கான‌ 33 சதவீத இட ஒது‌க்கீ‌ட்டை திமுக தொட‌ர்‌ந்து  வலியுறு‌த்தி வருகிற‌து. அதை  நிறைவேற்ற‌ வே‌ண்டு‌ம். ஜாதிவாரி கண‌க்கெடு‌ப்பு தொட‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்பன‌ உ‌ள்பட 11 விவகார‌ங்க‌ள் குறி‌த்து நாடாளும‌ன்ற‌‌த்தி‌ல் எழு‌ப்பவு‌ம், விவாதி‌க்கவு‌ம் அனுமதி‌க்க வே‌ண்டு‌ம் என‌ திமுக சா‌ர்பி‌ல் கோர‌ப்ப‌ட்டது எ‌ன்ற‌ன‌‌ர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT