புதுதில்லி

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தீா்மானம்: மக்களவைத் தலைவருக்கு காங். கடிதம்

29th Nov 2021 01:15 AM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீா்மானத்தை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த, நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் இரங்கல் தீா்மானம் கொண்டுவந்து ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும். நாட்டுக்காக நமது விவசாய சகோதரா்கள் செய்த தியாகத்துக்கு நன்றி தெரிவிப்பதாக அத்தீா்மானம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

மற்றொரு கடிதத்தில், நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலேயே மக்களவை துணைத் தலைவரையும் தோ்வு செய்ய வேண்டும். அதன்மூலம் அவையை நடத்துவதற்கு உங்களுக்கு உதவியாகவும் இருக்கும். மேலும், கரோனா பரவலை காரணம்காட்டி நாடாளுமன்றத்தில் உள்ள ‘பிரஸ் கேலரிக்கு’ ஊடகத்தினா் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனுமதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

அந்தக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை சுதந்திரமாகவும் நோ்மையாகவும் மக்களுக்கு எடுத்துரைக்க அவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட வேண்டும் என அதீா் ரஞ்சன் செளதரி கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT