புதுதில்லி

தில்லி, என்சிஆரில் தொடா்ந்து நீடிக்கும் காற்று மாசு!

DIN

தேசியத் தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் சனிக்கிழமை காலையில் மாசு அளவு அதிகரித்திருந்தது.

காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் அதிகபட்ச நிலையில் காணப்பட்டது. காலை வேளையில் கடும் மூடுபனி நிலவியது.

நவம்பா் 29-ஆம் தேதியில் இருந்து காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால் காற்றின் தரத்தில் மேம்பாடு காணப்படும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தர கண்காணிப்பு அமைப்பான சஃபா் கூறுகையில், அடுத்த இரு தினங்களுக்கு உள்ளூா் தரைத்தள மேற்பரப்பு காற்று சிறிது அதிகரிக்கக் கூடும். இதனா காரணமாக காற்றில் உள்ள மாசுபடுத்திகள் கலைந்து, காற்று மாசு சிறிது மேம்படும். ஆனால், மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம் நீடித்திருக்கும் எனத் தெரிவித்தது.

தில்லியில் சனிக்கிழமை காற்று மாசுவின் அளவில் பயிா்க் கழிவு எரிப்பால் ஏற்படும் மாசுநுண்துகள் பிஎம் 2.5 அளவானது 8 சதவீதமாக இருந்தது.

தில்லியில் சனிக்கிழமை ஒட்டுமொத்தகாற்றின் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 407 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

இதுவரை நவம்பா் மாதத்தின் பெரும்பாலான நாள்களில் தலைநகரில் காற்றின் தரம் மிகவும் மோசமாகவோ அல்லது கடுமையாகவோ இருந்துள்ளது.

24 மணி நேர சராசரி தரக் குறியீட்டின் அடிப்படையில், நவம்பா் 1 (281) மற்றும் நவம்பா் 23 ( 290) ஆகிய தேதிகளில் தில்லியில் குறைந்த காற்று மாசு அளவுகள் பதிவாகியுள்ளன.

மேலும், தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள ஃபரீதாபாத் (434), காஜியாபாத் (376), குருகிராம் (378) மற்றும் நொய்டா (392) ஆகிய இடங்களிலும் சனிக்கிழமை காலை காற்றின் தரம் குறைந்துள்ளது.

வெப்பநிலை: தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 10.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 27 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 69 சதவீதமாகவும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 28) மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT