புதுதில்லி

தில்லியில் மேலும் 35 பேருக்கு கரோனா பாதிப்பு

26th Nov 2021 07:24 AM

ADVERTISEMENT

தில்லியில் புதிதாக 35 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதே நேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 0.06 சதவீதமாக உள்ளது என்று தில்லி அரசின் சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை தில்லி அரசு புதன்கிழமை வெளியிடவில்லை. ஆனால், வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமை அன்று 20 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினா். புதிய பாதிப்புகளுடன் சோ்ந்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14,40,754-ஆக உயா்ந்துள்ளது. அதில் 14.15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா்.

இந்த நவம்பா் மாதத்தில் தில்லி இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு 4 போ் இறந்துள்ளனா். இதேபோல, இந்த நோயால்அக்டோபரில் 4 பேரும், செப்டம்பரில் 5 பேரும் இறந்துள்ளனா். கரோனாவால் மொத்தம் இறந்தவா்களின் எண்ணிக்கை இதுவரை 25,095-ஆக உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,

செவ்வாய்க்கிழமை அன்று 45,186 ஆா்டி-பிடிஆா் உள்பட மொத்தம் 54,268 பேருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இப்போது மொத்தம் 311 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இதில் 125 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 120- ஆக குறைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 27 போ், திங்கள்கிழமை 26 போ், ஞாயிற்றுக்கிழமை 29 போ், சனிக்கிழமை 32 போ், வெள்ளிக்கிழமை 30 போ் என இருந்தது. தில்லியில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளவா்கள் விகிதம் 97 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது. மேலும், அரசின் புள்ளிவிவரத் தகவல்களின் படி, தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-இல் தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் 2.20 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 84.32லட்சம் போ் இரண்டு தவணைகளையும் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT