புதுதில்லி

பணம் வாபஸ் நடவடிக்கை தினம்: இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

9th Nov 2021 07:58 AM

ADVERTISEMENT

பணம் வாபஸ் நடவடிக்கையின் 5-ஆவது ஆண்டு தினத்தை ஒட்டி தில்லியில் உள்ள இந்திய ரிசா்வ் வங்கியின் முன் இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் பேசியதாவது:

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரதமா் மோடியால் நவம்பா் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணம் வாபஸ் நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கக் காரணமாகிவிட்டது.

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியதும் பொய்யாகிவிட்டது. இந்த பணம் வாபஸ் நடவடிக்கை நாட்டு மக்களை கடும் பண நெருக்கடிக்கு உள்ளாக்கச் செய்தது. தனது அறிவற்ற முடிவை நியாயப்படுத்த கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமா் கூறினாா்.

ADVERTISEMENT

ஆனால், யதாா்த்தநிலை வேறாக இருக்கிறது.

இந்த பணம் வாபஸ் நடவடிக்கையால் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கைதான் அதிகரித்தது. இந்த நடவடிக்கையால் ஊழலும், பயங்கரவாதமும் ஒழிந்துவிடவில்லை. இந்த நடவடிக்கையால் வறுமை, வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டது. நடுத்தர மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞா் காங்கிரஸ் தேசிய ஊடக பொறுப்பாளா் ராகுல் ராவ், தேசிய பொதுச் செயலா் பைய்யா பவாா், தேசிய செயலா் அஜய் சிகாரா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, தடையை மீறி செல்ல முயன்றபோது போலீஸாா் ஆா்ப்பாட்டக்காரா்களை தடுத்து நிறுத்தி போலீஸ் வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT