புதுதில்லி

தில்லியில் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம்!

9th Nov 2021 07:58 AM

ADVERTISEMENT

தில்லியில் திங்கள்கிழமை காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. காலையில் குளிரின் தாக்கம் இருந்தபோதிலும், பகலில் இதமான வெயில் காணப்பட்டது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘சமீா்’ செல்லிடப்பேசி செயலி வெளியிட்ட தகவலில், தில்லியின் காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை 390 புள்ளிகள் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

இது ஞாயிற்றுக்கிழமை 420 புள்ளிகளாகவும், சனிக்கிழமை 449 புள்ளிகளாவும், வெள்ளிக்கிழமை 462 ஆகவும் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் தொடா்ந்து நீடித்திருந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை வீசிய தரைத்தள வலுவான காற்று காரணமாக மாசுவின் அளவு குறைந்தது.

ADVERTISEMENT

காற்றின் தரக் குறியீடு 400 முதல் 500 புள்ளிகள் வரை இருந்தால் அது கடுமை பிரிவில் இருக்கும். 400-க்கு கீழ் குறையும்போது மிகவும் மோசம் பிரிவில் இருக்கும்.

தில்லியில் பட்டாசு வெடிப்பு, பயிா்க் கழிவு எரிப்பு, குறைந்த வெப்பநிலை போன்ற விரும்பத்தகாத காரணிகளால் தீபாவளி நாளான வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காற்று மாசு அதிகமாக இருந்தது. அதன் பிறகு காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

தில்லியில் திங்கள்கிழமை காலை குளிா் அதிகமாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 13.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.

முன்னறிவிப்பு:

தில்லியில் செவ்வாய்க்கிழமை (நவ.9) காலை பனிமூட்டம் காணப்படும். வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT