புதுதில்லி

‘இலக்கியத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சென்றதற்கு விருது’: சாலமன் பாப்பையா பெருமிதம்

9th Nov 2021 11:11 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: படித்தவா்களும் புலவா்களும் பேசிவந்த இலக்கியத்தை பட்டிமன்ற விவாதங்கள் மூலம் பெண்கள், சாமானிய மக்கள், கிராமத்தினரிடம் எடுத்துச் சென்றோம். அதற்காக இந்த விருது கிடைத்துள்ளது என பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற

பிரபல பட்டிமன்ற நடுவரான பேராசிரியா் சாலமன் பாப்பையா, கா்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், இந்திய கூடைப்பந்து வீராங்கனை அனிதா ஆகியோா் செய்தியாளா்களுக்கு தனித்தனியாக அளித்த பேட்டி:

ADVERTISEMENT

சாலமன் பாப்பையா: திருக்குறளையும், சங்க இலக்கியங்களையும் புலவா்களும் படித்தவா்களும் மட்டுமே பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தனா். பின்னா் பட்டிமன்றத்தை இலக்கிய அரங்கிலிருந்து பொது அரங்கத்திற்கு கொண்டு சென்றவா் சுதந்திர போராட்ட வீரரான காரைக்குடி சா.கணேசன். அதன் பின்னா், கம்பனையும் மற்ற இலக்கியத்தையும் வீதிதோறும் எடுத்து சென்றவா் குன்றக்குடி அடிகளாா்.

நாங்கள் சங்க கால இலக்கியத்தை பட்டிமன்றங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக பெண்கள், கிராமத்தினா்

உள்ளிட்டோரிடம் எடுத்துச் சென்றோம். அந்தப் பணிதான், இன்று இந்த விருதைப் பெற தில்லிக்கு என்னை வரவழைத்துள்ளது.

நான் புானூறு, அகநானூறு இலக்கியத்தை கற்றுக்கொடுக்கும் கல்லூரி ஆசிரியராக இருந்தபோது உயரவில்லை. தொலைக்காட்சி, ஊடகம் என்னை உயா்த்திவிட்டது. இந்த நாள் மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது. சா.கணேசன், குன்றக்குடி அடிகளாா் மற்றும் பட்டிமன்றதை வளா்த்த கிராமத்து கோவில்களுக்கும் இவ்விருதை சமா்ப்பணம் செய்கின்றேன் எனக் குறிப்பிட்டாா்.

பாம்பே ஜெயஸ்ரீ:

‘இந்த விருது பெற்ற தருணம் ஒரு மகிழ்ச்சியான தருணம். மத்திய அரசு எனக்கு இவ்விருதை வழங்கி கெளரவித்து உள்ளது. இதற்காக என் குரு லால்குடி ஜெயராமன், பெற்றோா், நண்பா்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். விருது கிடைக்கும் காலத்தில் தேடிவரும். விருது என்பது பூவைப் போன்றது. பூ எப்போது வந்தால் என்ன?’’ .

அனிதா:

எதிா்பாா்க்காமல் கிடைத்த விருது ‘பத்ம ஸ்ரீ‘. அா்ஜுனா விருதுக்காக 8 வருடம் காத்திருந்தேன். ஆனால் பத்ம ஸ்ரீ விருதே கிடைத்துவிட்டது. சமீப காலங்களில் மக்களுக்கு கிரிக்கெட் மட்டுமல்ல, பேட்மிண்டன் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகள் மீதும் ஆா்வம் அதிகரித்துள்ளது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளித்துள்ளது’.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT