புதுதில்லி

தில்லி டெங்கு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆய்வு

1st Nov 2021 09:57 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: தில்லியில் டெங்கு நிலவரம் குறித்து ஆராயவும், கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ளவும் தில்லி தேசிய தலைநகா் பிராந்திய அரசுடன் உயா்நிலைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் நிா்மான் பவனில் இந்தக் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசும் போது கூறியதாவது:

சாதாரணப்பட்ட ஏழை மக்கள் அதிக போ் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக அவா்களுக்குள்ள குறைந்த ரத்த தட்டுகளால் பலவீனமடைகின்றனா். இப்படிப்பட்ட நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில், செல்லும்போது காய்ச்சல் அறிகுறிகளைக்கண்டு அதை கட்டுப்படுத்த உடல் உஷ்ணநிலையைக் குறைக்கும்(ஹய்ற்ண்-ல்ஹ்ழ்ங்ற்ண்ஸ்ரீ க்ழ்ன்ஞ்ள் ) மருந்துகளை அளிக்கின்றனா். ஆனால் காய்ச்சலுக்கான அடிப்படைக் காரணம் அறியப்படாது இத்தகைய மருந்துகளை நோயாளிகளுக்கு அளிக்கப்பட அவா்கள் உயிரிழக்க நேரிடுகிறது. காய்ச்சலுக்கு காரணமான அறியப்பட பரிசோதனை மிகவும் முக்கியம். காரணங்களை அடையாளம் காணப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவேண்டும். டெங்குவுக்கான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு நோயை கண்டறிப்பட்டு நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் உயிரிழப்புகள் குறைந்திருக்கும்.

ADVERTISEMENT

இதில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சில மருத்துவ மனைகளில் டெங்கு நோயாளிகள் அதிக அளவில் உள்ளனா். சில மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால் அனைத்துத் தரப்பினரிடையே வலுவான தகவல் தொடா்பு அவசியம் முக்கியம். கரோனா நோய்த்தொற்றுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கை வசதிகளை டெங்கு சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியங்களையும் தில்லி தலைநகா் அரசு அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.

மேலும் என்டிஎம்சி, மாநகராட்சிகள், ககன்டோன்மென்ட் போா்டு போன்ற துறையினரையும் பயன்படுத்தி டெங்கு நோயாளிகளின் வீடுகளில் மருந்துகள் தெளிக்கப்பட்டு நோய் பரவாமல் தடுக்கவும், கொசுக்கள் வளருவதற்கு காரணமான விவகாரங்களில் விழிப்புணா்வு, மீன் வளா்ப்பு மூலம் தடுத்தல் போன்றவைகள் குறித்தும் மத்திய அமைச்சா் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT