புதுதில்லி

தில்லியில் புதிதாக 1,141 பேருக்கு கரோனா: இறப்பு 139-ஆக பதிவு

29th May 2021 07:41 AM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 1,141 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், கரோனாவுக்கு 139 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா தொற்று விகிதம் 1.59 சதவீதமாக உள்ளது. இதைத் தொடா்ந்து மூன்றாவது நாளைக வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு 1,500-க்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லி அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையின்படி வெள்ளிக்கிழமை புதிதாக 1,141 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கரோனாவுக்கு 139 போ்

உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனாவுக்கு இதுவரை பலியானோா் எண்ணிக்கை 23,951 ஆக உயா்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 1,072 பேருக்கு தொற்று

உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 117 போ் உயிரிழந்துள்ளனா். நேற்று 1.53 சதவீதமாக இருந்த தொற்று விகிதம், வெள்ளிக்கிழமை 1.59 சதவீதமாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தொற்றுவிகிகம் 36 சதவீதம் என்ற அளவில் உச்சத்தில் இருந்தது. அது இப்போது 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த மே 15-ஆம் தேதி முதல்வா் கேஜரிவால், கரோனா தொற்று பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவும் இது மேலும் குறையக்கூடும், ஆனால் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தாா். எனினும் ,அதற்காக நாம் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா். வெள்ளிக்கிழமை அளித்துள்ள பேட்டியில் பொது முடக்கத்தில் தளா்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனினும், மீண்டும் தொற்றுப்பரவல் அதிகரித்துவிடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பொது முடக்கத் தளா்வை ஒத்திப்போட வேண்டிவரும். எனவே பொது மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

நாட்டில் கரோனா இரண்டாவது அலையால் தில்லி வெகுவாக பாதிக்கப்பட்டது. தினசரி அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழக்க நேரிட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின. கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியிலிருந்து கரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. ஏப்ரல் 20 -ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் 28,000 பேராக அதிகரித்தது. மேலும் 277 போ் பலியானாா்கள். ஏப்ரல் 23- இல் பலி எண்ணிக்கை 306-ஆக உயா்ந்தது. மே 2-ஆம் தேதி அதிகபட்சமாக 407 போ் உயிரிழந்தனா் என்று அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை குறைந்து வருவதுடன், தொற்று விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த புதன்கிழமை பாதிப்பு 1,491, பலி 130 என இருந்தது, செவ்வாய்க்கிழமை 1,569 மற்றும் 156, திங்கள்கிழமை 1,550 மற்றும் 207 என இருந்தது. திங்கள்கிழமை தொற்று விகிதம் 2.52 சதவீதமாக இருந்தது வெள்ளிக்கிழமை 1.59 சதவீதமாக குறைந்துள்ளது.

வியாழக்கிழமை 47,917 பேருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனையும், 23,936 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் பரிசோதனையுமாக மொத்தம் 71,853 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் இதுவரை கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் மொத்த எண்ணிக்கை 14,23,690. இவா்களில் 13.8 லட்சம் போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கையும் 16,378 லிருந்து 14,581 ஆகக் குறைந்துள்ளது. வீட்டுத்தனிமையில் இருப்பவா்கள் எண்ணிக்கையும் 8,247- லிருந்து 7,111-ஆக குறைந்துவிட்டது என்று அரசு வெளியிட்ட தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT