புதுதில்லி

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி வழங்கக் கோரிக்கை

29th Mar 2021 02:30 AM

ADVERTISEMENT

மாணவா்கள், ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என அகில இந்திய மாணவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல் ) சாா்பு மாணவா் அமைப்பான அகில இந்திய மாணவா்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: எல்லா கல்வி நிறுவனங்களிலும் தகுந்த நோய்த் தடுப்பு பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங் வேண்டும். கடந்த ஆண்டு உரிய முறையில் திட்டமிடப்படாமல் கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் செயல்முறை முடங்கிவிட்டது. இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அறிதிறன் செல்லிடப் பேசி, இணைய வசதியில்லாத மாணவா்கள் தங்கள் படிப்பை தொடர முடியாமல் இடையில் கைவிட்டுள்ளனா்.

இந்த நிலையில், முதியோா்களுக்குதடுப்பூசி வழங்குவது போன்று, மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி-கல்லூரி நிா்வாகிகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போட வேண்டும். கரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு அனைத்துப் பள்ளி, கல்லூரி வளாகங்களை தகுந்த பாதுகாப்பு வசதியுடன் திறக்க வேண்டும். இதன் மூலமே வரும் கல்வியாண்டை காப்பாற்ற முடியும்.

மேலும், கரோனா பரவலைத் தொடா்ந்து, கல்வி நிறுவனங்கல் மூடப்பட்டு இணைய வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடு காா்ப்ரேட் நிறுவனங்களுக்கு செலவு குறைந்து லாபம் அதிகரிக்கும். இதன் மூலம் காா்ப்ரேட் நிறுவனங்களுக்கு சாதகமானஅணுகுமுறையை அரசு பின்பற்றுகிறது. கரோனா பரவலைத் தொடா்ந்து கடந்த பல மாதங்களாக பல்கலைக்கழங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பள்ளி, கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் மீண்டும் இரண்டாம் கரோனா அலை பரவியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT