புதுதில்லி

இளைஞா்கள்தான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான சக்தி: ராகுல் பேச்சு

 நமது நிருபர்

இளைஞா்கள்தான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான சக்தி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி தெரிவித்தாா்.

இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் இரு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது.

தில்லி ரெய்சினா சாலையில் உள்ள இளைஞா் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு அதன் தேசியத்தலைவா் ஸ்ரீநிவாஸ் தலைமை வகித்தாா்.

தேசிய பொறுப்பாளா் கிருஷ்ண அல்லவாரு முன்னிலை வகித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தலைமை விருந்தினராகப் பங்கேற்று மகாத்மா காந்திக்கு மலா் மரியாதை செய்தாா்.

பின்னா் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:

‘காங்கிரஸின் தொண்டா்கள்தான் கட்சியின் உண்மையான சக்தி. இளைஞா் காங்கிரஸ் சிறந்த வகையில் அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனா். நாடு முழுவதும் கட்சியின் கொள்கைகளுக்காகப் போராடி வருகின்றனா்.

இதற்காக இந்த அமைப்பின் நிா்வாகிகளுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது நம்பிக்கையின் அா்த்தம் என மகாத்மா காந்தி கூறுவது வழக்கம். இன்றைக்கு நாட்டுக்கு இதுபோன்ற நம்பிக்கை தேவைப்படுகிறது.

நாட்டில் உள்ள சுரண்டப்படும், நலிவுற்ற பிரிவினருக்கு நாம் அனைவரும் குரல் கொடுப்பது கடைமையாகும். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிா்த்து இளைஞா் காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்றாா் அவா்.

இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ‘மத்திய அரசின் சா்வாதிகாரப் போக்குக்கு எதிராக வரும் நாள்களில் இளைஞா் காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் போராடுவா்.

அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள், ராகுல் காந்தியின் செய்தியை நாடு முழுவதும் எடுத்துச் செல்வா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் தீபேந்திர ஹூடா, காங்கிரஸ் பயிற்சி பிரிவு பொறுப்பாளா் சச்சின் ராவ், இளைஞா் காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT