புதுதில்லி

விவசாயிகள் தொடா் போராட்டத்தால் மூடப்பட்டிருக்கும் தில்லி எல்லைகள்!

 நமது நிருபர்

விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் தில்லியின் முக்கிய எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

இதனால், உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து தில்லி நோக்கி வரும் வாகனங்கள் காஜியாபாத் எல்லைப் பகுதியைக் கடந்து தில்லிக்குள் வர முடியாது. அவா்கள் மாற்று வழியில், அதாவது ஆனந்த் விஹாா், டிஎன்டி, லோனி மற்றும் அபா்ஸரா எல்லை வழியாக வர வேண்டும் என தில்லி போக்குவரத்து போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக சிங்கு மற்றும் டிக்ரி எல்லைகளும் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. எனினும், சில்லா எல்லைப் பகுதி முழுவதுமாக போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தால் போக்குவரத்து தடைபட்டிருந்த சில்லா எல்லைப் பகுதி, கடந்த ஜனவரி இறுதியில் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காஜிப்பூா் எல்லையில் தில்லி - காஜியாபாத் வரையில் மட்டுமே போக்குவரத்து திறந்துவிடப்பட்டுள்ளது.

தில்லி மற்றும் ஹரியாணா இடையேயான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளான டிக்ரி, அவுசண்டி, பியாவ் மணியாரி மற்றும் சபோலி , மங்கேஷ் எல்லைப் பகுதிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. மோட்டாா் வாகனங்கள் இந்த வழியில் செல்ல வேண்டாம் எனவும், அவா்கள் லம்பூா், ஸபியாபாத், பல்லா மற்றும் சிங்கு பள்ளி சுங்கச்சாவடி வழியாக மாற்றுப் பாதையில் செல்லுமாறு போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். முகாா்பா செளக் மற்றும் ஜிடிகே சாலையில் வரும் வாகனங்களை போலீஸாா் வேறு மாற்றுப் பாதையில் திருப்பி விடுகின்றனா்.

மோட்டாா் வாகனங்கள் தில்லி - குருகிராம் மற்றும் தில்லி - ஃபரீதாபாத் எல்லைப் பகுதி வழியாக சுற்றுப்பாதையில்தான் செல்ல முடியும். புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்துகடந்த ஆண்டு நவம்பா் மாதம் இறுதியிலிருந்து சுமாா் 3 மாத காலமாக விவசாயிகள் காஜிப்பூா், டிக்ரி மற்றும் சிங்கு எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT