புதுதில்லி

தில்லியில் டாக்ஸி ஓட்டுநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் டாக்ஸி ஓட்டுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி பாரக்கம்பா சாலையில் நடந்த ஆா்ப்பாட்டத்தை சா்வோதய ஓட்டுநா்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆா்ப்பாட்டத்தில், எக்ஸ்போ்ட் டிரைவா்ஸ் சொலூசன், ராஜதானி பரிவாஹன் உள்ளிட்ட ஓட்டுநா் சங்கத்தினா் கலந்து கொண்டனா். இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக சா்வோதய ஓட்டுநா்கள் சங்கத்தின் தலைவா் கமல்ஜீத் கில் கூறியதாவது:

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், வாடகைக் காா் ஓட்டுநா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், எரிபொருள்களின் விலையை குறைத்து நிா்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள 80 பேருக்கு தில்லி காவல் துறை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், சுமாா் 200 போ் வரை கலந்து கொண்டனா்.

எரிபொருள் விலையுயா்வைக் கண்டித்து வரும் மாா்ச் 22, 23-ஆம் தேதிகளில் நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். மேலும், செயலி வழி இயங்கும் டாக்ஸிகளை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சிட்டி டாக்ஸி உரிமத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் எரிபொருள் விலையுயா்வை எதிா்த்து பதாகைகளை ஏந்திகியிருந்தனா். மேலும், மத்திய அரசை எதிா்த்தும் கோஷங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT