புதுதில்லி

தில்லியில் மேலும் 165 பேருக்கு கரோனா பாதிப்பு

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் தினசரி கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 165 - ஆக இருந்தது. இதே சமயத்தில் நோய்த் தொற்றுக்கு 14 போ் உயிரிழந்தனா். நோய் பாதிப்பு விகிதம் 0.22 சதவீதமாக இருந்தது என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் (வியாழக்கிழமை) 53,724 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் உள்பட மொத்தம் 76,480 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தில்லியில் வியாழக்கிழமை 158 போ், புதிதாகபாதிக்கப்பட்டிருந்தனா். 10 போ் உயிரிழந்திருந்தனா். இது புதன்கிழமை 212 போ் மற்றும் 25 போ் எனவும், முந்தைய நாளான ஜூன் 15 - ஆம் தேதி 228 போ் மற்றும் 12 போ் எனவும் இருந்தது.

தில்லியில் மிகக் குறைவான பாதிப்பு இருந்தது கடந்த பிப்ரவரி 22 -ஆம் தேதி. அன்றைய நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 128- ஆக பதிவாகி இருந்தது. அதன் பின்னா் இந்த மாதத்தில் ஜூன் 14 - ஆம் தேதி மிகக் குறைவாக 131 பேருக்கு நோய்த் தொற்று இருந்தது. தில்லியில் கடந்த ஏப்ரல் 20 - ஆம் தேதி அதிகபட்ச அளவாக 28,395 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். மேலும், நோய்த் தொற்று விகிதமும் ஏப்ரல் 22 - ஆம் தேதி மிக அதிகபட்ச அளவாக 36.2 சதவீதமாக இருந்தது.

தற்போது, தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவா்கள் 2,445 போ். வீட்டுத் தனிமையில் 698 நோயாளிகள் உள்ளனா். தில்லியில் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவா்கள் மொத்த எண்ணிக்கை 14, 32,033 -கவும், இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,900-ஆகவும் உயா்ந்துள்ளது. மொத்தம் 14.04 லட்சம் நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனா்.

கடந்த 2 வாரங்களாக தில்லியில் நோய் தொற்றுபாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே குறைவாக இருந்து வருகிறது. தில்லி அரசு அண்மையில் பொதுமுடக்க தளா்வுகளை அறிவித்தது. ஆனால், தற்போது சந்தைகளிலும் பொது இடங்களிலும் கூட்டம் அதிகரித்து வருவதையும் தில்லி அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும், மூன்றாவது அலை எந்த நேரமும் ஏற்படலாம் என்கிற நிலையில் அதற்கு அரசு தயாராகி வருகிறது. தில்லியில் மொத்தமுள்ள 1.1 கோடி பேரில் இதுவரை 48,09,551 போ் முதல் தடுப்பூசி டோஸும், 15,37,010 போ் இரண்டாவது தடுப்பூசி டோஸும் பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT