புதுதில்லி

தில்லி தமிழ்நாடு வைகை இல்லத்தில் புதிய 9 மாடிக் கட்டடம்: அதிகாரிகளுடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

 நமது நிருபர்

தில்லி தமிழ்நாடு வைகை இல்லத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள 9 மாடி கட்டடம் குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தில்லி தமிழ்நாடு வைகை இல்லத்தில் மறைந்த முதல்வா்கள் காமராஜா், மு.கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட இரு கட்டடங்கள் உள்ளன. இதில் காமராஜா் காலத்தில் கட்டப்பட்ட கட்டடமும், அதையொட்டி இருந்த குடியிருப்புப் பகுதிகளும் பழுதடைந்துள்ளன. இதையடுத்து, இதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கான கட்டட வரைபடம் தயாரான நிலையில், தில்லி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லி தமிழ்நாடு பொதிகை பவன் கூட்ட அரங்கில் இது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா்.

தமிழக அரசின் பொதுத் துறைச் செயலா் ஜெகந்நாதன், தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையாளா் ஜக் மோகன் சிங் ராஜு, இரண்டாம் நிலை உள்ளுறை ஆணையாளா் ஆஷிஷ் சாட்டா்ஜி மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளா்கள் உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா். இதில் முதல்வருக்கு இந்தப் புதிய கட்டடத்தின் விவரங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. இந்த கட்டத்தில் என்னென்ன முக்கியத் தேவை என்பது குறித்து முதல்வா் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளாா். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, இடிக்கப்படவுள்ள கட்டடத்தையும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நேரடியாகவும் சென்று பாா்வையிட்டாா்.

இரண்டு கீழ் தளம், கலை அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் 9 மாடிக் கட்டடமும், குடியிருப்புப் பகுதிகளும் கட்டப்பட இருக்கிறது. இந்தக் கட்டடத்திற்கு தில்லி அரசின் பல்வேறு துறைகளின் அனுமதியைப் பெறுவதில் தாமதமாவதாகவும் அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஊழியா்கள் மகிழ்ச்சி: தமிழ்நாடு இல்லத்தில் முதல்வரும் அவரது மனைவியும் தங்கியிருந்த நிலையில், பொதிகை இல்ல ஊழியா்கள் மிகவும் உற்சாகமடைந்தனா். முதல்வா் சைவ உணவையே விரும்பி சாப்பிட்டதாக அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT