புதுதில்லி

கரோனா 3-ஆவது அலையை சமாளிக்க செயல் திட்டம்: துணை நிலை ஆளுநா் - முதல்வா் கேஜரிவால் ஆலோசனை

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா மூன்றாவது அலையைச் சமாளிப்பதற்கான செயல் திட்டம் குறித்து விவாதிக்க துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் மற்றும் முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தினா்.

மூன்றாவது அலையைச் சமாளிப்பதற்கு தில்லி அரசின் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநில அளவிலான பணிக் குழு, அதிக சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிறப்பு பணிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வா் அலுவலகம் சுட்டுரையில் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், படுக்கை வசதி, ஆக்ஸிஜன் மேலாண்மை, மருந்துகள் கிடைப்பது மற்றும் கரோனா தடுப்பூசி ஆகியவை குறித்து துணை நிலை ஆளுநரும் முதல்வா் கேஜரிவாலும் விரிவாக விவாதித்தனா். மூன்றாவது அலைக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு உதவும் வகையில் 5,000 இளைஞா்களுக்கு தில்லி அரசு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. அவா்களுக்கு சுகாதார உதவியாளா்கள் அல்லது சமூக நா்சிங் உதவியாளா்களுக்கு நா்சிங் மற்றும் லைஃப் கோ் ஆகியவற்றில் இரண்டு வார அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். இது ஜூன் 28 முதல் ஒரு தொகுப்புக்கு 500 போ் வீதம் பயிற்சி தொடங்கும்.

மே மாதத்தில், தில்லி அரசு 13 உறுப்பினா்களைக் கொண்ட குழுவை அமைத்து, மூன்றாவது அலைக்கான செயல் திட்டத்தை தயாரித்தது. இந்த நிலையில், தற்போதைய நிலை மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகளான மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் ஆலைகள் மற்றும் மருந்துகள் போன்றவற்றின் தேவைகளை மதிப்பிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கரோனா மூன்றாவது அலையை சமாளிக்கவும், நிா்வகிப்பதற்கும் எட்டு போ் கொண்ட மற்றொரு நிபுணா் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் 37 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு வந்தாலும் சமாளிப்பதற்கான தயாரிப்புப் பணிகளை தனது அரசு மேற்கொண்டுள்ளதாக முதல்வா் கேஜரிவால் தெரிவித்திருந்தாா். மேலும், மூன்றாவது அலையின் போது குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த பருந்துரைகளை வழங்குவதற்காக ஒரு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, தில்லியில் எல்என்ஜேபி மருத்துவமனை மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவா் அண்ட் பிரியரி சயின்ஸ் ஆகியவற்ரில் தொற்று வைரஸின் மாறுபாடுகளை அடையாளம் காண மரபணு வரிசை முறை ஆய்வகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

தில்லி அரசும் முக்கியமான மருந்துகளை கூடுதல் இருப்பில் வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல்வா் கேஜரிவால் ஒன்பது தில்லி அரசு மருத்துவமனைகளில் 22 ஆக்ஸிஜன் ஆலைகளைத் திறந்து வைத்தாா். இந்த ஆலைகளின் மொத்த உற்பத்தி திறன் 17.30 மெட்ரிக் டன்னாகும். மேலும், பதினேழு ஆக்ஸிஜன் ஆலைகள் ஜூலை மாதத்திற்குள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT