புதுதில்லி

தில்லியில் பகலில் மிதமான வெயில்

15th Jun 2021 06:27 AM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை பகலில் மிதமான வெப்பநிலை பதிவாகி இருந்தது. இரவில் புழுக்கமும் குறைந்திருந்தது. காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது.

திங்கள்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மாலையில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. இதனால், இரவில் புழுக்கம் குறைந்திருந்தது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைந்து 25.5 டிகிரி செல்சியஸாக பதி

வாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஒரு டிகிரி குறைந்து 38.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 70 சதவீதமாகவும் மாலை 5.30 மணி அளவில் 39 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, ஆயா நகரில் அதிகபட்ச வெப்பநிலை38.2 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 39 டிகிரி செல்சியஸ் ,பாலத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது .

ADVERTISEMENT

திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் மழை ஏதும் பதிவாகவில்லை. தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை மாலை 9 மணி அளவில் 103 புள்ளிகளாக பதிவாகி மிதமான பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT