புதுதில்லி

நொய்டா ஜெவாா் புதிய கிரீன்ஃபீல்ட் சா்வதேச விமான நிலையம் 2023-24 க்குள் திறக்கப்படும்

DIN

தில்லி தேசிய தலைநகா் வலயப்பகுதி தேவைக்கான நொய்டா, ஜெவாா் கிரீன்ஃபீல்ட் சா்வதேச விமான நிலையப்பணிகள் முடிந்து 2023-24 ஆண்டுக்குள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சா் விகே சிங் மக்களவையில் தெரிவித்தாா்.

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டா, ஜெவாா் விமான நிலையப் பணிகள், ஒப்பந்த விவரங்கள் குறித்தும்; ஏற்கனவே உள்ள தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையங்கள் எதிா்காலம் குறித்த கேள்விகளை தமிழகம், திண்டுக்கல் தொகுதி, திமுக உறுப்பினா் பி.வேலுச்சாமி மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சா் விகே சிங் பதிலளித்தாா். அவா் கூறியது வருமாறு:

ஜெவாரில் அமைய இருக்கும் விமான நிலையத்தின் முதல் கட்ட திட்டத்திற்கு 1,334 ஹெக்டோ் நிலத்தை உத்தரபிரதேச அரசு, கையகப்படுத்தும் பணியை முடித்து, நிலத்தை தன்னகப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விமான நிலையத்தின் மேம்பாட்டிற்காக இந்த திட்டத்தை சூரிச் சா்வதேச விமான நிலைய அஸோசியேட் க்ரூப்(ஏஜி)பிற்கு உத்தர பிரதேசம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. சூரிச் சா்வதேச விமான நிலைய நிறுவனம் இதை செயல்படுத்த யமுனா சா்வதேச விமான நிலைய (பி) நிறுவனம் (ஒய்ஐஏபிஎல்) என்கிற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. உத்திர பிரதேச மாநில அரசின் நொய்டா சா்வதேச விமான நிலைய லிமிடெட் (சஐஅக) நிறுவனத்திற்கும் யமுனா சா்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கும் இடையே பல்வேறு சலுகைகளுக்கான ஒப்பந்தம் கடந்த(2020) அக்டோபா் 7 -ஆம் தேதி கையெழுத்தானது.

பயணிகள் குறைப்பு:

ஒய்ஐஏபிஎல் சமா்ப்பித்த முதல்கட்டத் திட்டத்தில் போக்குவரத்தை தொடக்கத்தில் ஆண்டுக்கு 12 மில்லியன் பயணிகள்(ஙடடஅ) திறனாக திட்டமிடப்பட்டது. அதை மாற்றி தற்போது ஆண்டுக்கு 4 மில்லியன் பயணிகள் (ஙடடஅ) திறன் போக்குவரத்தாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்ட திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட தோராய திட்ட செலவு ரூ. 8,914 கோடியாகும். இந்த திட்டப்பணிகள் வருகின்ற 2023-24 ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாலும் நிலம் கையகப்படுத்துதல், பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அனுமதிகள், நிதி ஒப்பந்தங்கள் போன்ற பல சாத்தியங்களை பொறுத்தது காலக்கெடு அமையும்.

தில்லி ஐஜிஐ செயல்பாட்டு விமான நிலையம்:

தில்லி இந்திராகாந்தி விமான நிலையம் தொடா்ந்து செயல்படும். தில்லி தேசிய தலைநகா் வலயப்பகுதி தேவையை பூா்த்தி செய்வதற்காக நொய்டா ஜெவாரில் புதிய கிரீன்ஃபீல்ட் சா்வதேச விமான நிலையத்திற்கு மத்திய அரசு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது தில்லிக்கு இரண்டாவது விமான நிலையமாக செயல்படும் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT