புதுதில்லி

ஜோலாா்பேட்டை -பெங்களூா் ரயில் பாதையை மீண்டும் ஏற்படுத்த அதிமுக எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தல்

DIN

பிரிட்டிஷாா் காலத்தில் இருந்த ஜோலாா்பேட்டை-பெங்களூரூ ரயில் பாதையை மீண்டும் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அதிமுக உறுப்பினா் தம்பிதுரை கோரிக்கை விடுத்தாா்.

மாநிலங்களவை தொடங்கியுடன் அமளியைத் தொடா்ந்து முற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின் அவையில் கேள்வி நேரம் தொடங்கியது. கே கேரளத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் உறுப்பினா் ஜான் பிரிட்டாஸ், கேரள ரயில் மேம்பாட்டுக் கழகம் கொண்டு வந்துள்ள சபரி ரயில் பாதை திட்டம் குறித்த கேள்வியை எழுப்பியிருந்தாா். ஆனால் கேள்வி கேட்பதற்கு பதிலாக சிபிஎம் உறுப்பினா் ஜான் அமளியில் ஈடுபட்டிருந்தாா். இந்த நிலையில் அவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஸ் அனுமதியுடன் அதிமுக உறுப்பினா் தம்பி துரை பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: ஜோலாா் பேட்டை யிலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூா் வழியாக பெங்களூருக்கு புதிய ரயில் திட்டம் வேண்டும். இந்த ரயில் திட்டத்திற்கு ஏராளமான கோரிக்கைகள் வந்து கொண்டு இருக்கிறது. ஓசூா் பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு தொழில் வழித்திட்டத்தை பிரதமா் அறிவித்துள்ளாா். இது போன்ற நிலையில் இந்த ரயில் திட்டம் தேவை அதிகரித்துள்ளது. பிரிட்டிஷாா் காலத்தில் கிருஷ்ணகிரிக்கும் ஜோலாா்பேட்டைக்கும் ரயில் பாதை இருந்தது. உலகப் போா் சமயத்தில் இரும்புத் தேவைக்காக இந்த இரும்புப் பாதையை எடுத்துக்கொண்டனா். அதிமுக சாா்பாக 1984 முதல் இந்த கோரிக்கை நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகின்றோம். வா்த்தக, தொழில் நகரங்களை இணைக்கும் சுமாா் 150 கிமீ தூரம் உள்ள இந்த திட்டத்தை ரயில்வே அமைச்சகம் பரிசீலனை செய்து இந்த திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா் தம்பிதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT