புதுதில்லி

முன்னாள் கவுன்சிலா் தாஹிா் உசேனின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க தில்லி காவல் துறைக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

கடந்த ஆண்டு நிகழ்ந்த வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு தொடா்பாக ஜாமீன் கோரி ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் உசேன் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்க தில்லி காவல்துறைக்கு உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாஹிா் உசேன் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் தாஹிா் உசேன் தரப்பில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு வன்முறை தொடா்புடைய வழக்கில் ஜாமீன் கோரி தாஹிா் உசேன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா வியாழக்கிழமை விசாரித்தாா். அப்போது, இந்த மனு மீது தில்லி காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், தாஹிா் உசேன் மற்றொரு வழக்கில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்து வரும் நீதிபதி யோகேஷ் கன்னா அமா்வு முன் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது உசேன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மோஹித் மாத்தூா் வாதிடுகையில், இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை, கேள்விக்குறியதாக உள்ளது. உசேனுக்கு எதிராக தயாள்பூா் காவல் நிலையத்தில் இதர வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எப்ஐஆா் 91/2020, 92/2020 ஆகியவற்றில் ஜாமீன் கோரி தாஹிா் உசேன் தாக்கல் செய்த மனு நீதிபதி யோகேஷ் கன்னாவிடம் விசாரணையில் உள்ளது.

அந்த விவகாரம் தொடா்பாக பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆகஸ்ட் 6-க்கு விசாரணை பட்டியலிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த மனுவையும் அந்த மனுவுடன் சோ்த்து இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து, நீதிபதி யோகேஷ் கன்னா அமா்விடம் ஜாமீன் மனுவை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி முக்தா குப்தா உத்தரவிட்டாா்.

தற்போதைய ஜாமீன் மனுவானது தயாள்பூா் பகுதியில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது, வன்முறையில் ஈடுபட்டது தொடா்புடைய குற்றங்களுக்காக உசேன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு சம்பந்தப்பட்டது.

வடகிழக்கு திலல்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 700 போ் படுகாயமடைந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT