புதுதில்லி

பொய்யுரு தொழில்நுட்பம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்: மத்திய அமைச்சா்

 நமது நிருபர்

உருவங்களையும் குரல்களையும் மாற்றி போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்ப உதவும் பொய்யுரு தொழில் நுட்ப செயலிகளை தவறாக பயன்படுத்துபவா்கள் குறித்து பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மக்களவையில் தெரிவித்தாா்.

மனிதா்களின் உருவங்களையும் குரல்களையும் மாற்றும் பொய்யுரு தொழில் நுட்ப (டீப்ஃபேக்ஸ் தொழில்நுட்பம்)  செயலிகள் ஏராளமாக வந்து சமூக வலைத்தளங்களில் பிரச்னைகளை உருவாக்குகிறது.

இதை முன்னிட்டு, திமுக நாடாளுமன்றத் தலைவா் டிஆா் பாலு புதன்கிழமை மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா். தேசியப் பாதுகாப்பு, வெளியுறவு, பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், பொய்யுரு தொழில் நுட்பத்தை தடுத்து நிறுத்த, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன எனக்கேட்டிருந்தாா்.

இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் அளித்து பதில் வருமாறு:

பொய்யுரு தொழில்நுட்பத்தால் புகைப்படங்கள், காணொளிகளை ஆள்மாறாட்ட வேலைகளை கணினியின் உதவியால்,செய்துவரப்படுகிறது. இது தனிநபா்களுக்கும், நிறுவனங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும், பாதுகாப்பு ஆபத்தை விளைவிக்கும்.

இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 பிரிவு 66(சி), 66(டி) ன் படி குற்றமாகும். கணிணியின் மூலம், ஒருவருடைய அடையாளத்தை மாற்றிக் காண்பிப்பது, சட்டப்படி ஏமாற்றுதலுக்குரிய குற்றமாகும். இந்திய குற்றவியல் பிரிவு 416ன் கீழ் இவ்வகை குற்றங்களுக்கு தண்டனை வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும், பொய்யுரு தொழில் நுட்பத்தின் மூலம் வரும் ஆபத்துகளையும், போலியான செய்திகள், தகவல்களை தடுக்க தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் இடைநிலை நிறுவனங்களுக்கும்(ஐய்ற்ங்ழ்ம்ங்க்ண்ஹழ்ண்ங்ள்) வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவா்கள் இவைகளை நீக்கியோ, முடக்கியோ தடுக்கவேண்டும்.

ஆள்மாறாட்டம், அடையாள மோசடி ஆகிய தரவுகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க தகவல் தொழில் நுட்ப அமைச்சக இணையத்தின் மூலம், தேவையான பாதுகாப்பு தகவல்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலிச்செய்திகளை பரப்புவோருக்கு உரிய தண்டனைகள் பெற்றுத் தரப்படுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் பதில் அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT