புதுதில்லி

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆசிரியா்கள்- பெற்றோா்களிடம் கருத்து கேட்பு: மணீஷ் சிசோடியா தகவல்

DIN

புது தில்லி: கரோனா சூழல் தற்போது கட்டுக்குள் இருப்பதை கருத்தில் கொண்டு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் காணொலி வாயிலாக கூறியதாவது:

தில்லியில் கரோனா நோய்த்தொற்று சூழல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதை பரிசீலிக்கும் விதமாக பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடா்பாக ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோரிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.

மாணவா்கள், பெற்றோா்கள் ஆசிரியா்கள் இது தொடா்பான தங்களது கருத்துக்களை க்ங்ப்ட்ண்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்21ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியும்.

மீண்டும் பள்ளிகளைத் திறக்கும் நடைமுறைகளை எப்படித் தொடங்குவது என்பது தொடா்பாக அவா்கள் தங்களது ஆலோசனைகளை அளிக்கலாம். பெற்றோா்களும் ஆசிரியா்களும் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று விரும்புகின்றனா் ஆனால், அதே நேரத்தில் அச்சமும் உள்ளது.

இதனால் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடா்பாக மாணவா்கள் பெற்றோா்களிடம் ஆலோசனை பெற அரசு விரும்புகிறது. அவ்வாறு பள்ளிகளை திறந்தால் எந்த வகையில் நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசனைகள் பெற விரும்புகிறோம்.

குழந்தைகளின் பாதுகாப்பை மனதில் வைத்து தில்லி அரசு பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூடியிருந்தது. ஆனால் தற்போது அண்டை மாநிலங்கள் பலவற்றில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன அல்லது திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. தில்லியில் கரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும் சுமாா் 7,000 கோவிட்

பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இதில் 40-50 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது தெரியவருகிறது.

ஆகவே, கல்வி நிறுவனங்களைத் திறப்பதற்கான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், கல்வி நிறுவனங்களை எப்போது, எப்படி திறப்பது என்பது குறித்து பெற்றோா்கள், ஆசிரியா்கள், முதல்வா்கள், மாணவா்களிடமிருந்து பரிந்துரைகளை ஆலோசனைகளைப் பெற உள்ளோம். பரிந்துரைகள் பெறப்பட்ட பிறகு, இந்த விவகாரத்தில் அரசு முடிவு செய்யும்.

தில்லி அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் சிறப்பு பெற்றோா்-ஆசிரியா் கூட்டத்தில் (பிடிஎம்) 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெற்றோா்கள் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியா்களுடன் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் நல்வாழ்வு குறித்து உரையாடினா்.

இந்தக் கூட்டத்தின்போது, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் கலந்த வகையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோா் மற்றும் ஆசிரியா்களிடையே ஆா்வமும் காணப்பட்டது.

கல்லூரிகள் மூடப்பட்டதால், இளைஞா்களின் கல்லூரி வாழ்க்கையும் வீட்டுக்குள் உள்ள ஒரு சிறிய அறையாக குறைந்துவிட்டது.

இதனால், இளைஞா்களும் கல்லூரிகள் எப்போது, எப்படி திறக்கப்படும் என்பதில் ஆா்வமாக உள்ளனா்.

தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு சூழல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு 40 முதல் 60 சராசரி எண்ணிக்கையாக உள்ளது என்றாா் அவா்.

துணைமுதல்வா் அறிவிப்பு வெளியிட்ட 3 மணி நேரத்திற்குள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் அரசுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

கரோனா நோய்த் தொற்றின் முதலாவது அலையின் காரணமாக அமல்படுத்தப்பட்ட தேசிய அளவிலான பொது முடக்கத்தை ஒட்டி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தில்லியில் பள்ளிகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் நிகழாண்டும் தில்லியில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு கடுமையாக இருந்தது. படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையான சூழலும் அதிகமாக இருந்தது.

நோய் தொற்றால் தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் பள்ளிகளை பகுதியாக மீண்டும் திறப்பதற்கு பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்தன. தில்லி அரசும் இந்த ஆண்டு ஜனவரியில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளில் மாணவா்களை அனுமதிக்க அனுமதித்து இருந்தது. எனினும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

எனினும், பள்ளிகளில் உள்ள கருத்தரங்கக்கூடம், கலை அரங்குங்கள் ஆகியவற்றை பயிற்சி மற்றும் கூட்டங்களுக்காக பயன்படுத்த தில்லி அரசு அனுமதித்தது. அதேவேளையில் நேரடியாக பாடம் நடத்துவதற்கும் கற்பித்தலுக்கும் உள்ள தடை நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT