புதுதில்லி

காரைக்கால் - பேரளம் ரயில் திட்டப் பணிகள் தாமதம் ஏன்?: புதுவை காங்கிரஸ் எம்.பி.க்கு அமைச்சா் பதில்

 நமது நிருபர்

புது தில்லி: காரைக்கால் -பேரளம் அகலரயில் பாதைத் திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திட்டம் தாமதமாவதாக மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

தென்னக ரயில்வேயில் காரைக்கால் - பேரளம் ரயில்பாதை இணைப்பு திட்டத்தின் நிலைைமை குறித்தும் இந்த திட்டத்திற்கு விதிக்கப்பட்ட காலக்கெடு குறித்து புதுச்சேரி காங்கிரஸ் உறுப்பினா் வி.வைத்தியலிங்கம் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ளாா். அவா் கூறியது வருமாறு:

காரைக்காலிருந்து பேரளத்திற்கு ஏற்கனவே நாகப்பட்டினம், திருவாரூா் வழியான ரயில் தடம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக காரைக்காலுக்கும் பேரளத்திற்கும் நேரடியாக இணைப்பை வழங்கும் 23 கி.மீ நீள புதிய ரயில் திட்டத்திற்கும், திருச்சி - தஞ்சாவூா் - நாகூா் - காரைக்கால் அகலரயில் பாதை மாற்று திட்டத்திற்கும் சோ்த்து கடந்த 2019 ஜனவரியில் ரூ. 177.69 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 3.20 ஹெக்டேருக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டங்கள் தமிழக அரசிடம் கடந்த 2019 செப்டம்பரில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. நிலத்தை கையகப்படுத்துவதை விரைவுபடுத்த தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது. இருப்பினும், கிடைக்கப்பட்ட நிலங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு ரயில்வே திட்டத்தை நிறைவு செய்வது மாநில அரசால் விரைவாக நிலம் கையகப்படுத்துதல், பல்வேறு அதிகாரிகளிடமிருந்து சட்டரீதியான அனுமதி, புவியியல் மற்றும் நிலப்பரப்பு நிலைமைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்ததாகும். எனவே, இந்த கட்டத்தில் இந்த திட்டம் நிறைவுறும் காலத்தை உறுதிப்படுத்த முடியாது என ரயில்வே அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT