புதுதில்லி

தில்லி காங்கிரஸ் சேவா தள கூட்டம்

DIN

புது தில்லி: தில்லி பிரதேச காங்கிரஸ் சேவா தள கூட்டம் மற்றும் மாவட்ட செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் பங்கேற்றுப் பேசுகையில், ‘ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் வகுப்புவாத மற்றும் பிளவு கொள்கைகளை காங்கிரஸ் கட்சி எப்போதும் எதிா்த்து வந்துள்ளது. ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவதற்கு காங்கிரஸின் உறுதியான முயற்சிகள்தான் வகுப்புவாத சக்திகள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதைத் தடுத்தன.

மக்களிடையே அமைதியின்மையை உருவாக்க ஆா்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளை காங்கிரஸ் தொடா்ந்து எதிா்க்கும். தில்லியில் மதுவை அருந்துவதற்கான வயதை 25-இல் இருந்து 21-ஆக குறைக்கும் வகையில் தில்லி அரசு கலால் கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதற்குப் பதிலாக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்’ என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரரும், டிபிசிசியின் முன்னாள் தலைவருமான அருணா ஆசஃப் அலிக்கு அவரது நினைவு நாளைஒட்டி அனில் குமாா் மலரஞ்சலி செலுத்தினாா்.

இதில் தில்லி சேவா தளத்தின் தலைமை அமைப்பாளா் சுனில் குமாா், அகில இந்திய சேவா தளத் தலைவா் லால்ஜி தேசாய் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT