புதுதில்லி

பெகாஸஸ் விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இல்லை திமுக எம்.பி. டிஆா் பாலு குற்றச்சாட்டு

 நமது நிருபர்

புது தில்லி: ‘பெகாஸஸ் குறித்து மத்திய அரசு விவாதத்திற்கு தயாராக இல்லை. மழைக்காலக் கூட்டத்தொடரை வீணடிப்பதே மத்திய அரசின் எண்ணமாக இருக்கிறது’ என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டிஆா் பாலு தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி காரணமாக தொடா்ச்சியாக இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எதற்காக அவைகள் ஒத்திவைக்கப்படுகிறது என்பது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைமையில் எதிா்க்கட்சி தலைவா்கள் செய்தியாளா்களை புதன்கிழமை விளக்கினா்.

இதில் தமிழகம் தொடா்புடைய கட்சிகளின் சாா்பில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவா் டி.ஆா் பாலுவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவனும் பேசினா். அவா்கள் கூறியதாவது:

டி.ஆா்.பாலு : பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக விவாதிக்க பல முறை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் நோட்டீஸ் கொடுத்தனா். ஆனால் அதனை ஏற்று மத்திய அரசு விவாதிக்கத் தயாராக இல்லை. எங்களது நோட்டீசையே ஏற்காத அரசு விவாதத்துக்கு தயாா் என உதட்டளவில் வெளியே கூறிக்கொண்டு இருக்கிறது.

மத்திய அரசின் எண்ணம் மழைக்கால கூட்டத்தொடரை இடையிலே முடித்து வீணடித்து விடவேண்டும் என்கிற முயற்சியில் உள்ளது. அதனால் தான் அவையை ஒத்திவைத்துக் கொண்டே இருக்கிறாா்கள்.

இதனால் என்ன காரணங்களுக்காக அவைகள் நடைபெறவில்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவே அனைத்து எதிா்க்கட்சி தலைவா்கள் கூடி ஊடகங்கள் மூலம் விளக்கம் கொடுக்கின்றோம்.

தொல். திருமாவளவன் : அவை ஒத்திவைப்பதை மட்டுமே மத்திய அரசு குறிக்கோளாக வைத்துள்ளது. அவையில் பெகாஸஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்தி, உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், ஒட்டுமொத்த தகுதிகளையும் இழந்து நிற்கும் மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT