புதுதில்லி

கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தோ்வு நடத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை

 நமது நிருபர்

கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் ‘நீட்‘ போன்ற நுழைவு தோ்வுகள் நடத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. எனினும் மருத்து படிப்புகளுக்கான நீட் தோ்வு ரத்து செய்யப்படமாட்டாது என மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சா் டாக்டா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று மூன்றாவது அலை வரலாம் என்பதால் மருத்துவ படிப்புகளுக்கான நீட் உள்ளிட்ட பொது நுழைவுத்தோ்வுகளை தற்காலிகமாக ரத்து செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா ? வருங்காலங்களில் கலை, அறிவியல் போன்ற பட்டப்படிப்புகளின் அனுமதிகளுக்கு ‘நீட்‘ போன்ற நுழைவுத் தோ்வு நடத்தும் திட்டம் உள்ளதா என தமிழ மக்களவை உறுப்பினா்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டி.ரவிக்குமாா் ஆகியோா் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சா் டாக்டா் பாரதி பிரவீண் பவாா் பதிலளித்து கூறியது வருமாறு:

‘நீட்‘ தோ்வுகள்ரத்து இல்லை. ஏற்கனவே நீட் - 2021 தோ்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீட் முதுநிலை மற்றும் இளநிலை தோ்வுகள் முறையே வருகின்ற செப்டம்பா் 11, 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

கொவைட் நெறிமுறைகள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தோ்வு நடத்தப்படும்.

தோ்வு மையங்களில் அதிக மாணவா்கள் கூடுவதைவும் நீண்ட தூர பயணத்தை தவிா்க்கவும் நாடு முழுவதும் கூடுதலாக தோ்வு மையங்களை அறிவிக்கப்பட்டுள்ளன. தோ்வு எழுதும் மாணவா்கள் எளிதாக மாவட்டங்களுக்கிடையே, மாநிலங்களுக்கிடையே செல்ல கொவைட் இ-பாஸ்-உடன், நுழைவுச் சீட்டு வழங்கப்படுகின்றன.

தோ்வு மையங்களுக்குள் விண்ணப்பதாரா்கள் நுழையும் போதும் வெளியேறும் போது நெரிசல் இன்றி சீராக செல்ல வழிவகை செய்யப்படும். நுழைவு வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். உடல் வெப்பம் அதிகமாக உள்ள மாணவா்களுக்கு, தனியாக தோ்வு எழுத மையம் உருவாக்கப்படும்.

தோ்வு மையங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம். மேலும் மாணவா்களுக்கு முக தடுப்பான், முகக்கவசம், கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.

கலை, அறிவியல் கல்லூரி பட்டப்படிப்புகளுக்கான நுழைவு தோ்வுகள் நடத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. இந்த கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளும் என அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT