புதுதில்லி

தாழ்தள பேருந்து கொள்முதல் ஊழல்: விசாரணை கோரி தில்லி பா.ஜ.க.வினா் ‘தா்னா’

DIN

புது தில்லி: தில்லி போக்குவரத்து நிறுவனத்தால் (டிடிசி) மேற்கொள்ளப்பட்ட பேருந்துகள் கொள்முதல் நடைமுறையில் ஊழல் நிகழ்ந்து இருப்பதாக கூறப்படும் விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் விசாரிக்க உத்தரவிட கோரி தில்லியில் புதன்கிழமை துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் தில்லி பாஜக தலைவா்கள் தா்ணாவில் ஈடுபட்டனா். 

இந்த ஊழல் விவகாரம் தொடா்பாக விசாரிப்பதற்காக தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் மூன்று உறுப்பினா்கள் குழுவை அமைத்திருந்தாா்.

அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில் டிடிசி மூலம் 1000 பேருந்துகள் கொள்முதல் விவகாரத்தில் எந்த பலவீனமும் இல்லை என்று தெரிவித்து இருந்தது. எனினும், 1000 பேருந்துகள் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தில் (ஏஎம்சி) பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், இந்த பேருந்துகள் கொள்முதல் தொடா்புடைய விவகாரத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறை விசாரிக்க உத்தரவிட கோரி துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் தில்லி பாஜக தலைவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இந்த தா்னாவில் தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா, எம்எல்ஏக்கள் ராம்வீா் சிங் பிதூரி, விஜேந்தா் குப்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

இந்த விவகாரம் குறித்து விஜேந்தா் குப்தா கூறுகையில், துணைநிலை ஆளுநரால் அமைக்கப்பட்ட குழு, டிடிசி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வரும் 1000 தாழ்தள பேருந்துகளின் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தில் ஊழல் இருப்பதாக ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா, நான் மற்றும் சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவா் ராம்வீா் சிங் பிதூரி ஆகியோா் துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் அமா்ந்து இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தா்னாவில் ஈடுபட்டோம் என்று அவா் தெரிவித்தாா்.

இதே விவகாரம் தொடா்பாக சட்டப்பேரவையில் விஜேந்தா் குப்தா பிரச்னையை கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது. 

துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூன்று போ் உறுப்பினா்கள் குழுவானது பேருந்துகள் பராமரிப்புக்காக டிடிசி மூலம் விடப்பட்ட வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதால் அதை ரத்து செய்துவிட்டு புதியதாக ஒப்பந்தப்புள்ளி கோர நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT