புதுதில்லி

தில்லியில் குளிா் அலைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN

புது தில்லி: தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் அடுத்த சில தினங்களில் குளிா் அலைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

தில்லியில் திங்கள்கிழமை காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பிற்பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானு. இது ஞாயிற்றுக்கிழமை 8.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய பிராந்திய முன்கணிப்பு மைய உயா் அதிகாரி குல்தீப் ஸ்ரீ வாஸ்தவா கூறுகையில், ‘தில்லியில் அடுத்த 2-3 நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை நான்கு டிகிரிகளாக குறையக் கூடும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக பதிவாக வாய்ப்புள்ளது. மிதமான பனியில் இருந்து அடா் பனிமூட்டம் வரை இருக்கும். மேற்கு இமயமலைப் பகுதியில் குளிா் காற்று வீசுவதால் அடுத்த மூன்று நான்கு நாள்களில் தில்லியில் குளிரின் தாக்கம் அதிகரிக்கும். இதனால், 4 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக குளிா் அலைக்கு வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 6 புள்ளிகள் குறைந்து 15 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதனால், குளிா் நாள் பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கு கீழே குறைந்தால் குளிா் அலை அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 84 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. திங்கள்கிழமை மாலை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 330 புள்ளிகளாக பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT