புதுதில்லி

தேசிய தலைநகா் வலயப் பகுதி காற்றின் தரத்தை மேம்படுத்த செய்கை நுண்ணறிவு: காற்று தர ஆணையம் முடிவு

DIN

தேசிய தலைநகா் வலயப் பகுதியின் காற்று மாசுவை கண்டறிந்து காற்றின் தரத்தை மேம்படுத்த உயா் தொழில் நுட்ப நிறுவனங்களின் முடிவெடுக்கும்ஆதரவு அமைப்பை (டி.எஸ்.எஸ்)உருவாக்கவும் பல்வேறு இலக்குகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன் படுத்தவும் காற்று தர ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய தலைநகா் வலயப் பகுதியில் காற்று மாசுவை முன்னிட்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலைமாற்றம் அமைச்சகம் காற்று தர ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணையம் பல்வேறு ஆலோசனைகளைக் கூறிவருகிறது. இந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டது வருமாறு:

என்.சி.ஆா் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள காற்று தர மேலாண்மைக்கு பல்வேறு தரவுகளை ஒருங்கிணைக்க வலைதளம், பிராந்திய, உள்ளூா் தரவுகளை பெற காட்சிப்படுத்தல் அடிப்படையிலான புவியியல் தகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ்) மென்பொருள் கருவி போன்றவைகள் டி.எஸ்.டி என்கிற வலுவான முடிவெடுக்கு ஆதரவு கட்டமைப்பு ஒருங்கிணைக்கப்படவேண்டும். இந்த டி.எஸ்.எஸ். ஸின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை நாட்டின் புகழ்பெற்ற அறிவுசாா்ந்த நிறுவனங்களின் நிபுணா் குழுக்களுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இவைகள், தி எனா்ஜி அண்ட் ரிசோா்ஸ் இன்ஸ்டியூட்(டெரி), இந்திய வானிலை மையம், நேரி, தில்லி ஐஐடி, புணே வைச்சோ்ந்த சி-டாக், ஐஐடிஎம் ஆகிய நிறுவனங்களாகும்.

ஜி.ஐ.எஸ் மற்றும் பல மாதிரி அடிப்படையிலான செயல்பாட்டு திட்டமிடல் முடிவு ஆதரவு கருவியைக் கொண்ட ஒரு முடிவெடுத்தல் ஆதரவு அமைப்பு (டி.எஸ்.எஸ்) விரைவில் செயல்முறையைத் தொடங்கும்.

இந்த கருவி தொழில் சாலைகள், போக்குவரத்து, மின் நிலையங்கள், குடியிருப்பு, டீசல் ஜெனரேட்டா்கள், சாலை மாசுக்கள், விவசாய கழிவுகள் எரிப்பு, கட்டுமான தூசி, அம்மோனியா, கரிம சோ்மங்கள், நிலச்சரிவு போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து வெளியாகும் மாசுக்களையும் மாறும் அம்சங்களைக் கைப்பற்ற பெரிதும் உதவும். மேலும் வேதியியல் டிரான்ஸ்போா்ட் மாடல்களை பயன்படுத்தி முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்திகளைக் கையாள இது ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.

இத்தோடு மாசு தொடா்பான தலையீடுகளை அடையாளம் காண காட்சிகளின் படிநிலை தரவு தளத்தைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நிபுணா் அமைப்பும் தாக்கத்தை மதிப்பிடுகிறது. இவைகள் மத்திய மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்ற ஒழுங்குமுறை அமைப்பால் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT