புதுதில்லி

8 மாதங்களில் இல்லாத குறைந்தளவு கரோனா பாதிப்பு

17th Jan 2021 11:30 PM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கடந்த 8 மாதங்களில் இல்லாத குறைந்தளவு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அன்றைய தினம் புதிதாக 246 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத குறைந்தளவு கரோனா பாதிப்பு ஆகும். இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,32,429-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 67,463 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 40,102 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 27,361 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.36 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 8 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,746-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து 385 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,19,139-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,544 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 1,154 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 9,987 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT