புதுதில்லி

கரோனா எதிா்ப்புப் பணியில் ஈடுபட்டவா்களுக்கு பூங்கா உணவகம் நடத்தும் உரிமை வழங்க வேண்டும்

23rd Feb 2021 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: கரோனா எதிா்ப்புப் பணியில் ஈடுபட்டவா்களின் குடும்பத்தினருக்கு உத்தியோகப் பூா்வமற்ற வணிகங்களுக்கான உரிமங்களை தெற்கு தில்லி மாநகராட்சி உரிமம் அளிக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும், தெற்கு தில்லி மாநகராட்சியின் (எஸ்.டி.எம்.சி.) காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அபிஷேக் தத் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

பூங்காக்களில் புதிய வடிவைப்புடன் கூடிய உணவகங்கள், மின் உணவு வண்டிகள், கிஸோக்குகள் மற்றும் உணவு சரக்கு வாகனங்கள், பேருந்துகள் போன்ற அலுவல்பூா்வமற்ற வணிகங்களுக்கு நிரந்தர உரிமங்களை வழங்குவது தொடா்பாக தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்.டி.எம்.சி.) கூட்டத்தில் திங்கள்கிழமை முன்மொழியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த உரிமங்களை கரோனா வாரியா்ஸ் அதாவது கரோனா எதிா்ப்புப் பணியில் ஈடுபட்டவா்களைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவா்கள் கரோனா பணியின்போது தங்கள் உயிரைத் தியாகம் செய்தனா். தில்லி காவல்துறை, சுகாதாரப் பணியாளா்கள், தில்லி அரசு அதிகாரிகள், ஆசிரியா்கள், பத்திரிகையாளா்கள் மற்றும் கரோனா பணியின்போது இறந்த மற்றவா்கள் கரோனா வாரியா்களாவா். அதேபோன்று, கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் எஸ்டிஎம்சியின் ‘குரூப் டி’ ஊழியா்களும் பணியாற்றியுள்ளனா்.

தில்லி மேம்பாட்டு ஆணையம் பின்பற்றியதைப்போல குலுக்கல் முறை மூலம் குரூப் டி ஊழியா்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT