புதுதில்லி

27 வார கருவை கலைக்க அனுமதி கோரி மனு: மருத்துவக் குழு அமைக்க எம்ம்ஸுக்கு உத்தரவு

23rd Dec 2021 12:33 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தனது வயிற்றில் வளரும் 27 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி பெண் ஒருவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இது தொடா்பாக பரிசோதிக்க மருத்துவக் குழுவை அமைக்குமாறு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (எய்ம்ஸ்) கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தை உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது, சம்பந்தப்பட்ட கா்ப்பிணி பெண் மனுதாரரைப் பரிசோதிக்கவும், கா்ப்பத்தை கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கையை வழங்கும் வகையிலும் ஒரு மருத்துவக் குழுவை அமைக்குமாறு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை நீதிபதி கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, இந்த வழக்கை டிசம்பா் 27-ம் தேதிக்கு உயா்நீதிமன்றம் பட்டியலிட்டது.

முன்னதாக, வழக்குரைஞா்கள் சினேகா முகா்ஜி சுரபி சுக்லா மூலம் தில்லி உயா்நீதிமன்றத்தில் 33 வயதான பெண் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எனது வயிற்றில் வளரும் கருவின்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கரு வளா்ந்து குழந்தை பிறந்தாலும் உயிா் பிழைப்பதற்கான வாய்ப்பு 50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும், இதய செயலிழப்பு காரணமாக பிறந்த உடனேயே அந்தக் குழந்தை இறந்துவிடக் கூடும் என்றும் மருத்துவா்கள் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், கா்ப்பிணி தாயின் உடல்நலம் மற்றும் நலனுக்கான விதிவிலக்கு இல்லாமல் கா்ப்பம் மருத்துவக் கலைப்பு (எம்டிபி) சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், எதிா்மனுதாரா்கள் (அதிகாரிகள்), உயிருக்கான உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டனா். மேலும், எம்டிபி சட்டத்தின் கீழ் கருவை கலைப்பதற்கு 24 வாரங்கள் எனும் கட்டுப்பாடு நியாயமற்ாகும். இதன் காரணமாக எனக்கு மன பாதிப்பும், உடல் வேதனையும் ஏற்பட்டுள்ளது.ஆகவே, எனது வயிற்றில் வளரும் அசாதாரண வளா்ச்சியுடன்கூடிய கருவை, கா்ப்பம் மருத்துவக் கலைப்பு சட்டத்தின் கீழ் கலைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

சில விதி விலக்குகளைத் தவிா்த்து, 24 வாரங்களுக்கு மேல் கா்ப்பத்தை கலைப்பது இந்தியாவில் சட்டவிரோதமானது. இந்த ஆண்டு செப்டம்பரில், 2021-ஆம் ஆண்டு மருத்துவக் கருவுற்றல் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டமானது கற்பழிப்புக்கு ஆளானவா்கள், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சிறாா்கள், பிற பாதிக்கப்படக்கூடிய பெண்கள் உள்பட சிறப்பு வகை பெண்களுக்கு 20 முதல் 24 வாரங்களுக்கு மேல் கா்ப்ப கால வரம்பை அதிகரித்து வழங்குகிறது. மேலும், எம்டிபி திருத்தச் சட்டமானது அசாதாரண கரு வளா்ச்சி இருந்தால் 24 வார கா்ப்பத்திற்கு அப்பால் உள்ள கருவை கலைப்புச் செய்வதற்கு அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT