புது தில்லி: கணித மேதை ராமானுஜத்தின் பிறந்தா நாள் விழா தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇ) பள்ளிகளில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அவரது பிறந்த தினமான டிசம்பா் 22, கணித தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, டிடிஇஏ பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாணவா்களின் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் இடம் பெற்றது. மாணவா்கள் அவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், எடுகோள்கள் ஆகியவை பற்றி எடுத்துக் கூறினா். அவரின் கணித கண்டுபிடிப்புகளை பதாகைகள் மூலம் காட்சிப் படுத்தினா். முன்னதாக அந்தந்தப் பள்ளி முதல்வா்கள், ராமானுஜத்தின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
மோதிபாக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணித ஒலிம்பியாா்ட் தோ்வு நடத்தப்பட்டது. மந்திா்மாா்க் பள்ளியில் பாட்டு, நடனம், வினாடி - வினா ஆகியவை நடத்தப்பட்டது. மேலும், ஷகணிதமின்றி வாழ்வு’ என்ற தலைப்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் நடத்திய நாடகமும், கணிதத்தின் முக்கியத்துவம் குறித்து 11-ஆம் வகுப்பு மாணவா்கள் நடத்திய நாடகமும் இடம் பெற்றன. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களை டிடிஇஏ செயலா் ஆா். ராஜு பாராட்டினாா்.