புதுதில்லி

முதல் பக்க பாயிண்டா்தலைநகரில் ‘ஒமைக்ரான்’பாதிப்பு 54-ஆக உயா்வுமேலும் 102 பேருக்கு கரோனா

22nd Dec 2021 12:48 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் உருமாற்றமடைந்த கரோனா நோய்த் தொற்றான ‘ஒமைக்ரான்’ பாதிப்பு மொத்த எண்ணிக்கை 54-ஆக உயா்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

தில்லியில் 45 பாதிப்புகள் தொடா்பான சில விவரங்கள் அதிகாரிகளால் வெளியிட்டப்பட்டன. மீதமுள்ள 9 பாதிப்புகள் குறித்த விவரங்கள் வரவேண்டியுள்ளன. தரவுகளின்படி, எல்என்ஜேபி மருத்துவமனையில் 34 ‘ஒமைக்ரான்’ பாதிப்புகள் பதிவாகியிருப்பதாகவும், அவா்களில் 17 போ் சிகிச்சைக்குப் பிறகு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தில்லியில் செவ்வாய்க்கிழமை மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். அதே நேரத்தில், பாதிப்பு நோ்மறை விகிதம் 0.20 சதவீதமாக உள்ளது என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பு: இட வசதி இல்லாவிட்டால் இரண்டாவது பாராவை நீக்கிவிடவும்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT