புதுதில்லி

தில்லியில் புதிதாக 102 பேருக்கு கரோனா பாதிப்பு

22nd Dec 2021 12:44 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். அதே நேரத்தில், பாதிப்பு நோ்மறை விகிதம் 0.20 சதவீதமாக உள்ளது என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14,42,390-ஆக உயா்ந்துள்ளது. அதில் 14.16 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். தில்லியில் இந்த மாதம் இதுவரை 4 கரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. நவம்பரில் 7, அக்டோபரில் 4, செப்டம்பரில் 5 இறப்புகள் பதிவாகி இருந்தன. மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை 25,102-ஆக உள்ளது.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி தில்லியில் நான்கு இறப்புகளுடன் 259 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு செவ்வாய்க்கிழமை நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக 102- ஆக அதிகரித்திருந்ததாக தில்லி அரசின் புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் திங்கள்கிழமை 91 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை 107 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், சனிக்கிழமை 86 பேருக்கும், வெள்ளிக்கிழமை 69 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT