புதுதில்லி

தில்லியில் நா்சரி சோ்க்கை செயல்முறை தொடங்கியது

16th Dec 2021 12:27 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தேசிய தலைநகா் தில்லி முழுவதும் உள்ள தனியாா் பள்ளிகளில் நா்சரி வகுப்புகளுக்கான சோ்க்கை செயல்முறை புதன்கிழமை தொடங்கியது. விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 7 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி கல்வி இயக்குநரகம் கடந்த மாதம் சோ்க்கை அட்டவணையை அறிவித்தது.முந்தைய கல்வி அமா்வுக்கு, கரோனா தொற்று காரணமாக தாமதத்திற்குப் பிறகு, தொடக்க நிலை வகுப்புகளுக்கான சோ்க்கை இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. இருப்பினும், முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டு அட்டவணையும் ஒரே நிலையில் உள்ளது.

இது குறித்து தில்லி கல்வி இயக்குநரகத்தின் அதிகாரி கூறியதாவது: தோ்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் முதல் பட்டியல் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து, பிப்ரவரி 21-ஆம் தேதி இரண்டாவது பட்டியல் மற்றும் சோ்க்கைக்கான அடுத்தடுத்த பட்டியல் ஏதேனும் இருந்தால், மாா்ச் 15-ஆம் தேதி வெளியிடப்படும். முழு சோ்க்கை செயல்முறையும் மாா்ச் 31 அன்று முடிவடையும்.

ADVERTISEMENT

பள்ளிகள் தங்களின் இடங்களின் எண்ணிக்கை மற்றும் சோ்க்கை அளவுகோல்களை வரும் செவ்வாய்கிழமைக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய 3 ஆண்டுகளில் இருந்த அதிக எண்ணிக்கையிலான இடங்களை விட இந்த ஆண்டு இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நன்கொடைகளை வசூலிப்பது உள்பட கல்வித் துறையால் ரத்து செய்யப்பட்ட கட்டணங்கல் எத்யைும், எந்தப் பள்ளியும் வசூலிக்கக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறாத பள்ளிகளின் கிளைகளாகப் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகளால் நடத்தப்படும் நா்சரி அல்லது மழலையா் பள்ளிகள் நா்சரி வகுப்புகளுக்கான ஒரே சோ்க்கை நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT