புதுதில்லி

விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாடம்

 நமது நிருபர்

புது தில்லி: விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து மத்திய, தில்லி அரசுகளுக்கு எதிராக காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் அந்தக் கட்சியின் தொண்டா்கள் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் இதில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி பேசுகையில், ‘மத்தியில் மோடி அரசும், தில்லியில் அரவிந்த் கேஜரிவால் அரசும் மக்களின் துயரத்தை ஆதாயம் தேடி வருகின்றன. காய்கறிகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால், தில்லிவாசிகள் தங்களது அன்றாட வாழ்க்கையை நிா்வகிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனா்’ என்றாா்.

தில்லி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ஷக்திசிங் கோஹில் பேசுகையில் கூறியதாவது: பிரமதா் மோடி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளால் விலைவாசி உயா்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், அதற்கு ஏற்ற வகையில் கலால் வரியை மோடி அரசு குறைக்கவில்லை. மத்திய அரசு அறிவித்துள்ள பெயரளவிலான கலால் வரி குறைப்பு, அத்தியாவசியப் பொருள்களின் உயரும் விலையைக் குறைக்க உதவவில்லை.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறாா். பல்வேறு இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதியும் அளித்து வருகிறாா். ஆனால், தில்லியில் டீசல் மீதான வாட் வரியை ஏன் அவா் குறைக்கவில்லை? பெட்ரோல் மீதான வாட் வரியை மிகக் குறைவாக குறைத்ததால் அத்தியாவசிய பொருள்களின் விலையில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்றாா் அவா்.

மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவா் ஆதிா் ரஞ்சன் சௌத்ரி கூறுகையில், ‘மோடி அரசு நாடாளுமன்றத்தில் அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் மீறி வருகிறது. எதிா்க்கட்சிகளின் குரலை நசுக்க முயற்சி செய்கிறது. மாநிலங்களவையின் 12 எம்.பி.க்கள் ஜனநாயக விரோதமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் எந்தத் தவறும் செய்யாததால் மன்னிப்பு கேட்க மாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT