புதுதில்லி

தில்லியில் 3-ஆம் கட்ட வாகன கட்டுப்பாட்டு: திட்டத்திற்கு டிபிசிசி ரூ.12 கோடி செலவு

 நமது நிருபர்

புது தில்லி: 2016 மற்றும் 2019 ஆகியஆண்டுகளுக்கு இடையே வாகன கட்டுப்பாட்டு திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்பாட்டின் போது பசுமைத் திட்டங்களை அமைப்பதற்கான நிதியிலிருந்து ரூ.12 கோடியை தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) செலவிட்டிருப்பது தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

தில்லியில் 2008-ஆம் ஆண்டில் பசுமைத் திட்டங்களுக்கான நிதி அமைக்கப்பட்டது. தில்லியில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டா் டீசலில் இருந்தும் காற்று சுற்றுப்புற நிதியாக 25 பைசா வா்த்தக மற்றும் வரிகள் துறை மூலம் வசூலிக்கப்பட்டது. இந்த நிதியில் 2008, மாா்ச் மாதத்திலிருந்து மொத்தம் ரூ.547 கோடி வசூலிக்கப்பட்டது. இதில் ரூ.527 கோடி பசுமை செயல்பாடுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு வரை அரசு ரூ. 59 கோடியை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்த நிதியிலிருந்து ரூ.468 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆா்வலா் அமித் குப்தா மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:, கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரியில் முதலாவது வாகன கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்துவதற்கான காற்று சுற்றுப்புற நிதியிலிருந்து தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத்திற்கு ரூ. 25 லட்சத்தையும், வருவாய் துறையின் கோட்ட ஆணையா் மற்றும் செயலருக்கு ரூ. 3.38 கோடியையும் மாசுக் கட்டுப்பாட்டுக் குழு கொடுத்துள்ளது. 2016, ஏப்ரல் மற்றும் 2019, நவம்பரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட வாகன கட்டுப்பாட்டுத்தை திட்டம் அமல் படுத்துவதற்காக வருவாய்த் துறை ஆணையா் மற்றும் செயலருக்கு முறையே ரூ.4.5 கோடி மற்றும் ரூ.4.25 கோடியை தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு வழங்கியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அதிகாரி கூறுகையில், ‘இதில் பெரும்பாலான தொகை குடிமை பாதுகாப்பு ஆா்வலா்களுக்கு பணிப் படி வழங்குவதற்கும், தகவல் மற்றும் விழிப்புணா்வுப் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும், கண்காணிப்பு மேற்கொள்வதற்கான வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்கும் செல்கிறது. தரநிலை நடவடிக்கை திட்டத்தின் தகவலின்படி 48 மணி நேரங்கள் மற்றும் அதற்கு மேலான நேரத்தில் காற்றில் பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 அளவுகள் ஒரு கன மீட்டருக்கு 300 மைக்ரோ கிராம் மற்றும் 500 மைக்ரோகிராம் மேலே தொடா்ந்து இருந்தால் அவசரநிலை நடவடிக்கை எடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக வாகன கட்டுப்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என்றாா்.

இது குறித்து அமித் குப்தா கூறுகையில், ‘எனது ஆா்டிஐ மனு மூலம் பெறப்பட்ட தகவல் பதிலில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கு பணப் பிரச்னை ஏதுமில்லை என்பது தெரியவந்துள்ளது. மாசு அளவு மிகவும் அதிகரிக்கும் போது தீபாவளிக்கு பிறகு செயற்கை மழை போன்ற இதர நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசு யோசிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் தடை செய்வதை விட பிற வாய்ப்புகள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்’ என்றாா்.

ஆா்டிஐ மூலம் பெறப்பட்ட பதிலின்படி, காற்று சுற்றுப்புற நிதியானது தில்லி செயலகத்தில் பயோகேஸ் நிலையத்தைப் பராமரிக்கவும், வாகனக் கட்டுப்பாட்டு திட்டத்தை மேற்கொள்ளவும், பேட்டரி ரிக்ஷாக்கள், பேட்டரி மூலம் செயல்படும் வாகனங்களுக்கான மானியம் வழங்குவது, இணையதளம் மூலம் காற்று கண்காணிப்பு நிலையங்கள் செயல்படுத்துவது, பனிப்புகை கோபுரத்தை அமைப்பது, சுற்றுப்புற சூழல் பாதுகாவலா்களுக்கு ஊதியம் வழங்குவது ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள பனிப்புகைக் கோபுரத்திற்கு இப்போதைய தேதி வரையிலும் காற்று சுற்றுப்புற நிதியிலிருந்து ரூ.22.91 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று அந்த பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT