புதுதில்லி

கிழமை மாற்றம் தேனி மாவட்டத்தில் திராட்சை சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும்: மக்களவையில் அதிமுக எம்பி வலியுறுத்தல்

 நமது நிருபர்

புது தில்லி: தேனி மாவட்டத்தில் சாகுபடி பரப்பை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட வேண்டும் என தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் ப.ரவீந்திரநாத் மக்களவையில் வலியுறுத்தினாா்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை நேரமில்லா நேர விவாதத்தில் அவா் பேசுகையில் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் சுமாா் 2,800 ஹெக்டோ் பரப்பில் திராட்சை பயிரிடப்படுகிறது. இதில் 2,184 ஹெக்டோ் நிலம் தேனி மக்களவைத் தொகுதியில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் திராட்சை சாகுபடியில் தேனி மாவட்டம் மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. திராட்சை உற்பத்தியை அதிகரித்து, வணிக ரீதியாக பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இதற்கு தேனி மாவட்டத்தில் திராட்சை சாகுபடி பரப்பை விரிவுபடுத்த வேண்டும். திராட்சை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவதோடு திராட்சை சாகுபடியில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி விவசாயிகளின் ஈடுபாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

எனவே, தேனி தொகுதியில் உள்ள ஆணைமலையான்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் ஒருங்கிணைத்து பழங்கள் மீதான ஆய்வுக்கு நிரந்தரமான மையமாக உருவாக்க வேண்டும். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஆய்வு நிலையத்திற்கு தேவையான நிதி, ஆய்வாளா்கள் மற்றம் உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய வேளாண் துறை ஏற்படுத்தி தர மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT